நித்யனாந்தாவின் ’கன்னித்தீவு’ மர்மம்... ஆண் டாக்டரையும் அபகரித்துக் கொண்டாரா..?
அவரது பெண் சீடர்கள் மாயமாகி வரும் புகார்கள் அவ்வப்போது வெளியாகி மர்மத்துக்கு மேலும் மந்திரங்கள் ஓதுகின்றன. அப்படி ஒரு திடீர் புகார் இப்போது மீண்டும் கிளம்பி உள்ளது.
நித்யானந்தா எங்கிருக்கிறார்? அவரது சீடர்கள் என்ன ஆனார்கள் என்பதெல்லாம் பெரும் மர்மமாகவே தொடர்கிறது. இந்நிலையில், அவரது பெண் சீடர்கள் மாயமாகி வரும் புகார்கள் அவ்வப்போது வெளியாகி மர்மத்துக்கு மேலும் மந்திரங்கள் ஓதுகின்றன. அப்படி ஒரு திடீர் புகார் இப்போது மீண்டும் கிளம்பி உள்ளது.
ஈரோடு பல் மருத்துவர் ஒருவரை காணவில்லை என அவரது தாய் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். ஈரோடு நாச்சியப்பா வீதியைச் சேர்ந்த பழனிச்சாமி - லட்சுமி அம்மாள். இவர்களது மகன் முருகானந்தம். மேல்படிப்புக்காக 2003-ல் பெங்களூரு சென்றார். அப்போது நித்யானந்தாவின் சத்ஸங்கத்தை கேட்டு அவரது ஆசிரமத்துக்கு சென்று தங்கிட்டார்.
அடுத்து தனது பெயரை பிராணாசாமி என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு விட்டார். 3 ஆண்டுகளாக போராடி மகனை 2006 வீட்டுக்கு கூட்டி வந்துள்ளனர். மேட்டூரில் பல் மருத்துவமனை அமைத்து கொடுத்துள்ளனர். மீண்டும் 2007-ல் பெங்களூரு போய்விட்டார் முருகானந்தம். 2017-ல் முருகானந்தம் அப்பா பழனிசாமி இறந்துவிட்டார். அப்பாவின் இறப்புக்கு ஒரு நாள் மட்டும் வந்துவிட்டு மீண்டும் பிடதி திரும்பி இருக்கிறார் முருகானந்தம்.
மகன் பாசம் அதிகரிக்கும்போது லட்சுமி அம்மாள் பெங்களூரு சென்று மகனை பார்த்துவிட்டு வருவார். ஆனால் அதற்கும் தற்போது அனுமதி இல்லை. முருகானந்தம் ஆசிரமத்தில் இல்லை என்று தகவல் கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அம்மாள், மகனைக் காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்னும் 4 வாரத்தில் முருகானந்தம் இருப்பிடம் குறித்து பதிலளிக்க நித்யானந்தாவுக்கும் ஈரோடு எஸ்பிக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இப்போது ஈரோடு போலீஸ் முருகானந்தத்தை தேடி கண்டுபிடித்து வர பெங்களூருக்கு போயுள்ளது.
ஏற்கனவே தேனி டாக்டரும் இப்படி மாயமாகியதாக புகார் தரப்பட்டுள்ளது. இப்போது ஈரோடு டாக்டரையும் காணவில்லை என்கிறார்கள். நிறைய பேர் கைலாசாவுக்கு படையெடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த டாக்டர்களும் அங்கு போய்விட்டார்களா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.