நைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். 92 வயதான இவர், மத குருவாக உள்ளார். முகமது பெல்லோ அபுபக்கர், 107 பெண்களை திருமணம் செய்துள்ள இவருக்கு 185 குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் செய்தவர்களில் 10 பெண்களை விவாகரத்து செய்த இவர் 96 பெண்களுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அபுபக்கர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. மதகுரு ஒருவர் இறந்து விட்டதாக வதந்தியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர்.
ஆனால், அபுபக்கர் திடீரென வீடியோவில் தோன்றியுள்ளார். தான் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
