அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பே வெல்லப்போகிறார் என சீன குரங்கு ஜோதிடம் கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதாவது தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் கருத்துகணிப்பில் ஹிலாரி ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில், சீனாவில் உள்ள ஒரு சுற்றுலா பூங்காவில் ‘கெதா’ என்ற குரங்கு உள்ளது. இந்த குரங்கு இந்த ஆண்டு (2016)தொடக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன் ஷிப் கால்பந்து போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை துல்லியமாக கணித்து ஜோதிடம் கூறியுள்ளது.

அதாவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற போர்ச்சுகள் மற்றும் பிரான்சு நாட்டின் கொடிகள் எதிர் எதிரே கட்டப்பட்டன. அவற்றில் வாழைப்பழங்கள் தொங்க விடப்பட்டன. இந்த மஞ்சள் நிற டீ சர்ட் அணிந்த குரங்கை விரும்பிய பழத்தை திண்ணுமாறு கட்டளையிட்டனர். அது சரியாக போர்ச்சுகள் கொடியில் கட்டப்பட்டிருந்த வாழைப்பழத்தை சாப்பிட்டது. சிறிது நேரத்தில் தொடங்கிய போட்டியில் போர்ச்சுகள் வெற்றி பெற்றது.

எனவே, தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது குறித்து அந்த குரங்கிடம் ஜோசியம் கேட்கப்பட்டது.

இதற்காக, டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் ஆளுயர கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டன. பின்னர் அங்கு ‘கெதா’ என்ற ஜோதிட குரங்கு வரவழைக்கப்பட்டு அந்த குரங்கிடம் தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது பற்றி கேகப்பட்டது.

பின்னர் அது டொனால்டு டிரம்ப் கட் அவுட்டுக்கு முத்தம் கொடுத்து அடுத்த அதிபர் என தேர்வு செய்தது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.