கொரோனா வைரஸை எதிர்கொள்ள உலகளவில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை தலையாய கடமையாக பின்பற்றி வரும் நிலையில் அந்த உத்தரவை மீறி நடைப் பயிற்சியில் ஈடுபட்ட நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட்  கிளார்க்கின் பதவி பறிக்கப்பட்டுள்ளது .  இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது சுமார் 150 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவி பெரும் மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது .  இந்நிலையில் உலக அளவில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்துக்கும் தாண்டியுள்ளது .  இந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன.  இந்நிலையில் ,   அமெரிக்கா  இத்தாலி ,  ஸ்பெயின் போன்ற நாடுகள்  இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பல்வேறு நாடுகளின்  சுகாதாரத்துறை அமைச்சர்கள் இரவு பகல் பாராமல் தங்கள் நாட்டில் இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வேலைகளில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர்.   ஆனால் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த சுகாதார துறை அமைச்சரோ  இவ் அனைத்திற்கும் நேர்மாறாக நடந்து கொண்டுள்ளார் .  நாட்டில் ஊரடங்கு உத்தரவு  கடுமையாக்கப்பட்டு உள்ள நிலையில் , அதை பின்பற்றி  மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர் ,  அந்த உத்தரவுகளை எல்லாம்  மீறும் வகையில் தன் குடும்பத்துடன் ஹாயாக   நடைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் .  இந்த தகவல் புகைப்பட ஆதாரத்துடன் உள்ளூர் ஊடகத்தினர்  மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,  இதைக்கண்ட அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் சுகாதார அமைச்சரின் நடவடிக்கை கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்றார் ,  

முன்னுதாரனமாக இருக்க வேண்டிய அமைச்சர்,  இப்படி  ஊரடங்கு உத்தரவை மீறி நடந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க்கின்  சுகாதாரத்துறை அமைச்சர்  பதவியைப் பறித்துள்ளதுடன்,  அவரை இணை அமைச்சராக  தகுதி இறக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் டேவின் கிளார்க்க கடும் மன உளைச்சலுக்கு  உள்ளாகி உள்ளார்.  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய அமைச்சரே இதுபோல் சட்டத்தை மீறி நடந்திருப்பது வேதனை அளிக்கிறது அவர் செய்த குற்றத்திற்காக அவரை பதவிநீக்கம் செய்திருக்கவேண்டும் ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க அமைச்சர் டேவிட்டின் பங்கு அவசியம் என்பதால் அவரை தகுதி இறக்கம் செய்துள்ளேன் என காட்டமாக தெரிவித்துள்ளார் நியூசிலாந்தில் நடந்துள்ள இச்சம்பவம் சர்வதேச அளவில் வேகமாக பரவி வருகிறது .