ஒன்றரை லட்சம் பசுக்களை கொல்லப் போறாங்களாம் !! எங்கு ? எதற்கு தெரியுமா ?
மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோயைத் தடுக்கும் விதமாக 1 லட்சத்து 50 ஆயிரம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நியூசிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது. இது உலகின் மொத்த உற்பத்தியில் 3% ஆகும். அந்நாட்டில் 66 லட்சம் பால் மாடுகள் உள்ளன.
இந்நிலையில் பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.
இந்த பாக்டீரியாவில் உணவு பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், நியூசிலாந்தின் முக்கிய பொருளாதார தொழிலான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை பாதிக்கும் என கருதப்படுகிறது.
இதனால் பாக்டீரியா தொற்று கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளான பசுக்களுடன், ஆரோக்கியமாக உள்ள சில பசுக்களையும் கொல்ல நியூசிலாந்து ., அரசு முடிவு செய்துள்ளது.
பாக்டீரியா தாக்கப்பட்ட பசுக்களை கொன்று, எரித்து விடவும், பாக்டீரியா தாக்காத பசுக்களை மரங்களுக்கு உரமாகவும், உணவிற்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்று சுமார் 1,50,000 பசுக்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது..
அந்நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறை என்று கருதப்படும் இந்த ஒட்டுமொத்த அழிப்பு நடவடிக்கை குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் , இது மிகவும் கடினமான முடிவு என்றும் இத்தகைய ஒட்டு மொத்த பசு ஒழிப்பை யாரும் விரும்புவதில்லை என தெரிவித்தார்.
ஆனால் இதனை செய்யாவிட்டால் நியூசிலாந்து நாட்டின் கால்நடை வளம் அழிந்து விடும். உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால், நாட்டில் உள்ள 20000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களை காக்க முடியாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்..
இதையடுத்து பசுக்களை கொல்லும் நடவடிக்கையில் நியூசிலாந்து அரசு இறங்கியுள்ளது