விண்வெளியில் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு….மனிதர்கள் வாழ தகுதியானது என அறிவிப்பு…
பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா? என அறிவியலாளர்கள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள், அதாவது 235 டிரில்லியன் மைல்கள் தொலைவில் இந்த திய சூரியக்குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோள்களுக்கு, 'டிராப்பிஸ்ட் 1' என்று நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போலவே மனிதர்கள் வசிப்பதற்கு தகுந்த சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
ஏற்கனவே வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிக்கிறது என்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது.
புதிய கோள்கள் குறித்து ஓரளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இந்த கோள்களில் வாழக் கூடிய தன்மைகள் இருப்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டபின்பு தான் உறுதிப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரவித்துள்ளனர்.
