ஒரே அப்டேட்டுகளின் அணிவகுப்பாக இருக்கே.. மாஸ் காட்டப்போகும் ட்விட்டர் - CEO லிண்டா கொடுத்த இன்ப அதிர்ச்சி!
எலான் மஸ்க், எல்லாவற்றையும் செய்யக்கூடிய ஒரு செயலியை உருவாக்கும் தனது பல வருட கனவை நோக்கிய பயணத்தில் மற்றொரு மாபெரும் அடியை எடுத்து வைக்கவுள்ளார் என்று கூறினால் சற்றும் மிகையல்ல. அதாவது ட்விட்டர் (X) பயன்படுத்தும் பயனர்கள், இந்த ஒரே ஒரு செயலியை கொண்டு, எல்லாவிதமான சேவைகளையும் பெறவேண்டும் என்பதே அவர் விருப்பம்.
ஏற்கனவே ட்விட்டர் தளத்தில் பல மாற்றங்கள் வந்த நிலையில், விரைவில் ட்விட்டர் பயனர்கள், அதை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகம் செய்யவுள்ளார் எலான் மாஸ்க். கடந்த ஆண்டு அவர் ட்விட்டரை வாங்கியபோது, அவர் அந்த சமூக ஊடக தளத்தை இவ்வளவு காலமாக அவர் கனவு கண்ட ஒரு செயலியாக அதை அவர் மாற்றுவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ட்விட்டர், இது எலான் மஸ்க் அதை கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பயனர்கள் தங்கள் கருத்தை வரையறுக்கப்பட்ட வரிகளில் வெளிப்படுத்த உபயோகிக்கும் ஒரு சமூக ஊடக தளமாக இருந்தது. ஆனால் இப்போது, நீண்ட வீடியோக்களைப் பகிரவும், நீண்ட ட்வீட்களை எழுதவும், உள்ளிட்ட பல வசதிகளை இந்த தளம் அனுமதிக்கிறது. அதே போல விரைவில், நீங்கள் ட்விட்டரைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என்று தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோ பகிர்ந்துள்ள ஒரு புதிய வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்பெஷல் அப்டேட்! இந்திய பயனர்களுக்கு மட்டும் புதிய ஷாப்பிங், பேமெண்ட் வசதிகள் அறிமுகம்!
X உரிமையாளர் எலான் மஸ்க், X ஐப் பயன்படுத்த பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் சாத்தியக்கூறு குறித்து சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே போல ட்விட்டர் பயன்பாட்டைப் பயன்படுத்த, பயனர்கள் ஒரு சிறிய மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த உரையாடலின் போது மஸ்க் இதைப் பற்றி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் உள்ள Botகளை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டரை வாங்கிய பிறகு, மஸ்க் ட்விட்டரில் நிறைய மாற்றங்களைச் செய்தார்.
குறிப்பாக அவர் ட்விட்டரை வாங்கியவுடன், மஸ்க் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலை நீக்கிவிட்டு சமூக ஊடக தளத்தின் கட்டுப்பாட்டை தானே எடுத்துக் கொண்டார். பிரபலங்களின் கணக்குகளை அடையாளம் காணும் "ப்ளூ செக்" சரிபார்ப்பு முறையிலும் மாற்றங்களைச் செய்து, அதை யார் வேண்டுமானாலும் வாங்கக்கூடிய கட்டணச் சந்தா சேவையாக மாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.