தங்கள் எல்லையில் இருந்து உடனே இந்திய ராணுவம் வெளியேற வேண்டுமென நேபாள பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  இதை அடுத்து மத்திய அரசு புதிய இந்தியாவின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது அதில் சீனா,  பாகிஸ்தான், நாடுகள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகள் அனைத்தும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா இந்த வரைபடத்தின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

 

இதனிடையே,  இந்தியா நேபாளம் திபெத் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லைப்பகுதியை உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள நேபாளம் இந்தியாவின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது,  இந்திய எல்லையை ஒட்டியுள்ள கலாபானி நேபாளத்துக்கு சொந்தமான பகுதி எனவே அங்கிருந்து உடனே இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.  இந்த எல்லைப் பிரச்சனைகள் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.  ஆனால் இது குறித்து பேசியுள்ள நேபாளத்தின் பிரதமர் கலாபானியை யாருக்கும் விட்டுத்தரப்பட மாட்டாது அப்படியும் ஆதிக்கம் செலுத்த நினைத்தாள் அதை நேபாளம் தகுந்த முறையில் எதிர்கொள்ளும்  என தெரிவித்துள்ளார்.  அதே நேரத்தில் கலாபானியை யாருக்கும் விட்டுக் தரக்கூடாது எனவும் நேபாளத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

இந்நிலையில்  கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான யுவசங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அந்நாட்டின் பிரதமர்,  கே.பி ஒலி அங்கு பேசுகையில் ,  எங்கள் நாட்டின் ஒரு அங்குலத்தை கூட பிறநாடு ஆக்கிரமிப்பதை அனுமதிக்கமாட்டோம்.  எங்களது கலாபாணியிலிருந்து இந்திய ராணுவம் உடனே வெளியேற வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.  என அவர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.