காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டிற்கு  மத்தியஸ்தம் செய்ய நேபாளம் தயாராக இருக்கிறது என அந்நாடு அறிவித்துள்ளது .  காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம் நேபாளம் இவ்வாறு கூறியுள்ளது .  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அது முழுவதுமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது .  இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது . 

இந்நிலையில் அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா ஆக்கிய சர்வதேச நாடுகளை காஷ்மீர் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய பாகிஸ்தான் அழைத்தது ஆனால் அந்நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து கூறியதால்  இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க  முடிவு செய்த பாகிஸத்தான்,  னா உதவியுடன் ஐநா மனித உரிமைக் கவுன்சில் வரை கொண்டு சென்று புகார் கூறியுள்ளது இதற்கிடையே அமெரிக்கா அவ்வபோது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறது ,  அதாவது காஷ்மீர் விவகாரத்தில் இரு நாட்டுக்கும் இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட தயாராக உள்ளோம் என்றும் அடிக்கடி  அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறிவருகிறார், சமீபத்தில் அவர் இதே போன்ற கருத்தை மீண்டும் கூறினார் அதற்கு பதலடி கொடுத்த இந்தியா,  

காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான விவகாரம் என்றும் அதுமட்டுமல்லாது இத உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளதுடன் மூன்றாவது நாடு இதில்  தலையிடுவதை  இந்தியா ஒருபோதும்  அனுமதிக்காது என நேரடியாகவே டிரம்புக்கு எச்சரித்துள்ளது .  இது ஒருபுறம் இருக்க இது குறித்து  நேபாள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  அமைதிப் பேச்சின் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் . இரு நாடுகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் அதை பேச்சு மூலம் தீர்க்க முடியும் . தேவைப்பட்டால் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் நேபாளம் மத்தியஸ்தராக இருக்கும் .  ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் நேபாளம் தெரிவித்துள்ளது நேபாளத்தின் இந்த  ஆலோசனை இந்தியாவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது