கடவுள் ராமரை உரிமை கொண்டாடும் நேபாளம்...!! தொல்பொருள் ஆராய்ச்சியில் நிரூபிக்க தீவிரம்..!!

இந்துக்களின் கடவுள் ராமர் இந்தியாவில் பிறந்தவர் அல்ல, அவர் நேபாளத்தில் பிறந்தவர் என்றும்,  அவர் ஒரு நேபாளி என்பதால் அவர் தங்களுக்கே சொந்தம் எனவும் நேபாள பிரதமர் ஷர்மா ஓலி திகில் கிளப்பிய நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் நேபாளத்தில் உள்ள தோரியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Nepal clime the rights of Lord Rama, Seriousness to prove in archaeological research

இந்துக்களின் கடவுள் ராமர் இந்தியாவில் பிறந்தவர் அல்ல, அவர் நேபாளத்தில் பிறந்தவர் என்றும்,  அவர் ஒரு நேபாளி என்பதால் அவர் தங்களுக்கே சொந்தம் எனவும் நேபாள பிரதமர் ஷர்மா ஓலி திகில் கிளப்பிய நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் நேபாளத்தில் உள்ள தோரியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா-சீனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நேபாள பிரதமர் செயல்பட்டு வரும் நிலையில் அயோத்தி மற்றும்  ராமபிரான் குறித்த அவரின் கருந்து இந்தியாவை ஆத்திரமடைய வைத்துள்ளது. மேலும் ராமர் குறித்து தெரிவித்த கருந்தை உறுதி செய்யும் வகையில்  தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்க போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது இந்தியாவை மேலும் கொந்தளிப்பு அடைய வைத்துள்ளது. பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நேபாளம் வர்த்தக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் உறவு பாராட்டி வந்தது. இந்தியாவின்  உதவியுடன் பல்வேறு துறைகளில் நேபாளம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இந்தியாவுடன் கலாச்சார ரீதியாக நீண்ட நெடிய உறவுகொண்ட நேபாளம் திடீரென சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியாவை எதிர்க்க தொடங்கியிருப்பது இந்தியாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

Nepal clime the rights of Lord Rama, Seriousness to prove in archaeological research

குறிப்பாக இந்திய பகுதிகளான  கலபானி, லிம்பிய தூரா, லிபுலேக் போன்ற பகுதிகள் நேபாளத்திற்கு சொந்தமென அந்நாட்டின் பிரதமர் ஓலி உரிமை கொண்டாடி வருகிறார். இந்த மூன்று பகுதிகளையும் நேபாளத்துடன் நினைத்து அதற்கான புதிய வரைபடம் ஒன்றையும் வெளியிட்டு அதை தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் அனுமதியுடன் ஷர்மா ஓலி  அரசு சட்டமாக்கி உள்ளது. மேலும் இந்தியாவை கொரோனா வைரசுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது போன்ற செயல்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமர் ஓலியை பதவி விலகுமாறு கூறி ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதில் இந்தியா மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் ஓலி பேசி வருவதாகவும், அவர் நேபாள மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  ஷர்மா ஓலி பதிவி விலகியே ஆக வேண்டும் என ஆளுங்கட்சியின் மற்றொரு தலைவரான பிரசாந்தா வலியுறுத்துகிறார்.  இது ஷர்மாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

Nepal clime the rights of Lord Rama, Seriousness to prove in archaeological research

இந்நிலையில்  உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, அது தங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் ஓலி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்,  இந்து கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல, அவர் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும், அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார். இது இந்தியாவை கொந்தளிப்படைய வைத்துள்ளது. மேலும் தன் கருத்தை வலுப்படுத்தும் வகையில் நேபாளத்தில் உள்ள தோரி என்ற பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தி அதை நிரூபிக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள DOA செய்தித் தொடர்பாளர் ராம் பகதூர் குன்வார் "பிர்கஞ்சில் உள்ள தோரியில் தொல்பொருள் ஆய்வுகளைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் தொல்பொருள் துறை விவாதித்து வருகிறது."காத்மாண்டு நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தோரியில் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வை தொடங்க நேபாள தொல்பொருள் துறை திட்டமிட்டுள்ளது. பிரபு ராமரின் உண்மையான பிறப்பிடம் தோரி என்று ஷர்மா ஓலி கூறியுள்ள நிலையில்,  இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிரதமர் ஓலியின் அறிவிப்புக்குப் பின்னர்  தொல்பொருள் ஆய்வுகளை தொடங்குவதில் துறை தீவிரமாக உள்ளது என்றும்   DOA இயக்குநர் ஜெனரல் தாமோதர் கவுதம் தெரிவித்துள்ளார். பிரதமரின் உத்தரவு படி செயல்பட வேண்டியது எங்கள் பொறுப்பு ஆனால் அயோத்தி நேபாளத்தில் இருப்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என எங்களால் உறுதியாக கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios