ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி தன் காதலருடன் படுக்கை அறையில் தனிமையில் இருந்தபோது அவரது இல்லத்தில் இரண்டு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி  இக்கி  அசலியா,  இவருக்கு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சொந்த வீடு உள்ளது. 

ஓராண்டுக்கும் மேலாக இங்கு  இக்கி அசலிய வசித்து வருகிறார்,  இவர் சக பிரபல ராப் பாடகருமான அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளேபாய் கார்டியை சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்நிலையில் இருவரும்  லிவிங் டுகெதர் முறையில் ஒரே இல்லத்தில் வாழ்ந்து வருகின்றனர் .இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி இரவு  இக்கி அசலிய,  கார்டி இருவரும்  படுக்கையறையில் தனிமையில் இருந்தார்.  அந்நேரம் பார்த்து வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் இக்கி அசலியா நகை வைத்திருந்த அறைக்குள் நுழைந்து அங்கிருந்த ஏழு வைர  மோதிரங்கள் உட்பட 3 லட்சத்து 66 ஆயிரம் டாலர்,  அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 62 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 

பிறகு பொழுது விடிந்து அவர்கள் அறையை பார்த்த போது,  நகை வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.  நகை மற்றும் பணம், கொள்ளையடிக்கப்பட்டது உணர்ந்த இக்கி அசலியா கொள்ளைச் சம்பவம் குறித்து காதலர் பிளேபாய் கார்டியுடன் இணைந்து போலீசில் புகார் அளித்துள்ளார் அதன்பேரில் போலீசார் வாழ்க்கை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.