இஸ்ரேல் ஹமாஸ் போர் எதிரொலி: அமெரிக்காவில் பாலஸ்தீனச் சிறுவனை 26 முறை கத்தியால் குத்திக் கொன்ற கிழவர்!
71 வயதான ஜோசப் சுபாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலியாக அமெரிக்காவில் இருக்கும் பாலஸ்தீன சிறுவனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோவு அருகே முதியவர் ஒருவர் வீடு புகுந்து ஆறு வயதே ஆன சிறுவனையும் தாயையும் கத்தியால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வீட்டில் இருந்தம்போது, முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தி நுழைந்து இருவரையும் வெறியுடன் தாக்கியுள்ளார். கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதால் நிலை குலைந்து விழுந்த சிறுவன் தன் கண் முன்பே ரத்த வெள்ளத்தில் கிடைந்த நிலையில், தடுக்க முயன்ற தாயையும் முதியவர் தாக்கியுள்ளார்.
உயிருக்கு அஞ்சி ஓடிய தாயை விரட்டிச் சென்ற தாக்கி இருக்கிறார். பின் அந்தப் பெண் குளியல் அறைக்குள் சென்று கதவை அனைத்துக்கொண்டு போனில் காவல்துறைக்கும் கணவருக்கும் தகவல் கூறியுள்ளார். கொலைவெறித் தாக்குதல் நடத்திய முதியவர் அங்கிருந்து எளிமையாகத் தப்பிச் சென்றுவிட்டார்.
டெஸ்லாவுக்கு டஃப் கொடுக்கும் பெராரி! கார் விற்பனையில் கிரிப்டோ கரன்சியை வாங்க முடிவு!
பின் தாயும் மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிறுவனின் உடலுக்குள் செருகப்பட்டிருந்த கத்தியையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சிறுவனின் தாய் உயிருக்குப் போராடும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அந்நாட்டு போலீசார் 71 வயதான ஜோசப் சுபா என்பவரை கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலியாக அமெரிக்காவில் இருக்கும் பாலஸ்தீன சிறுவனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கொடூரக் கொலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுவனின் தாயின் பெயர் முதலிய விவரங்களை போலீசார் மறுத்துவிட்டனர்.