நியூயார்க் சுரங்கப்பாதையில் துப்பாக்கிச்சூடு… தாக்குதல் பற்றி தகவல் தெரிவிக்க காவல்துறை வலியுறுத்தல்!!

நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

multiple people shot at the 36th street subway station in brooklyn

நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரால் பலர் சுடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 5 பேர் பலியானதாகவும், குறைந்தது 13 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நியூயார்க் நகர காவல்துறை, புரூக்ளினில் உள்ள 36 ஆவது சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் பலர் சுடப்பட்டுள்ளனர்.

multiple people shot at the 36th street subway station in brooklyn

ஆனால், யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மேலும், இந்த தாக்குதல் தொடர்பாகத் தகவல்கள் ஏதும் கிடைத்தால் நியூயார்க் நகர் காவல்துறைக்குத் தெரிவிக்கவும். மேலும் தற்போது யாரும் அந்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்தில், சுரங்கப்பாதையின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கட்டுமான தொழிலாளி போன்ற உடையில், எரிவாயு முகமுடி அணிந்த ஒருவர் ஏதோ ஒன்றைத் தூக்கி எறிகிறார்.

 

அதிலிருந்து புகை வெளிப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த பல ட்விட்டர் பயனர்கள் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். ஆனால், இது பயங்கரவாத தாக்குதல்தானா இல்லையா என்பதை காவல்துறை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்களே முதலுதவி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios