பெற்ற குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடும் தாய்மார்களை பாா்த்திருப்பாேம். ஆனால் தூங்காத தன் பிள்ளைகளுக்கு ஒரு தாயே போதை ஊசி போட்டு தூங்க வைத்த அவலம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
வாஷிங்டனைச் சேர்ந்த அஷ்லி ஹட் என்ற பெண், மூன்று குழந்தைகளுக்கு தாயான இப்பெண், தூங்காமல் குறும்பு செய்த தனது குழந்தைகளிடம், தூக்கம் கொடுக்கும் ஜூஸ் எனக் கூறி, ஹெராயின் மருந்து கலந்த ஊசியை செலுத்தியுள்ளாா்.
இதனையறிந்து அஷ்லி ஹட்டைக் கைது செய்த போலிசார், அவரது குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதில், ஆஷ்லியின் 6 வயது மகன், தன் தாய் கொடூரமாக கழுத்தை நெறித்து போதை ஊசி போடுவார் எனக் கூறியது அனைவரின் இதயத்தையும் பதற வைத்தது. அவர் உண்மையில் பெற்ற தாய் தானா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இப்பெண்மணிக்கு, 2, 4 மற்றும் 6 வயதில் 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
