இறந்துகிடந்த பிச்சைக்கார பாட்டியின் பையில் கட்டுக் கட்டாக பணம்! எவ்ளோ கோடி தெரியுமா? அசரவைக்கும் பேங்க் பேலன்ஸ் வேற...

Money on the beggar
Money on the beggar


சாலையோரம் இறந்துகிடந்த பிச்சைக்கார பெண்ணின் பையில் கிடந்த கோடிக்கணக்கான பணம்
லெபனான் நாட்டிலுள்ள தலைநகர் பெய்ரூட் வீதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்த ஃபாதிமா ஆத்மன் என்பவர், சாலையோரம் இறந்துகிடந்தார்.

லெபனான் நாட்டில் கேட்பாரற்று இறந்து கிடந்த பிச்சைக்கார பெண்ணின் பையில் பல லட்சம் ரூபாய் பணமும், வங்கிக் கணக்கில் ஏழரைக் கோடி ரூபாய் பணமும் இருந்தது கண்டுஅனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Money on the beggar

பின், அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அவரது பையை சோதனை செய்தபோது, அவரது பையில் இந்திய மதிப்பில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பல லெபனான் நாட்டு ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார். இதைக் கண்டு ஆச்சரியமடைந்த போலீசார், அவரது பையை மேலும் சோதனையிட்டபோது, ஃபாதிமாவின் வங்கிக் கணக்கு புத்தகமும் சிக்கியது.

அதில், ஏழரை கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர்.தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios