Asianet News TamilAsianet News Tamil

மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு...- அதிபர் டிரம்புடன் விருந்து உண்ணும் முதல் உலகத் தலைவர் ...

Modi To Be First World Leader To Have White House Dinner With Donald Trump
Modi To Be First World Leader To Have White House Dinner With Donald Trump
Author
First Published Jun 24, 2017, 7:21 PM IST


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் விருந்து உண்ணும் முதல் உலகத் தலைவர் எனும் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற உள்ளார். 

அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாகச் செல்லும் பிரதமர் மோடிக்கு வௌ்ளைமாளிகை நிர்வாகம் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க உள்ளது.

2 நாள் பயணம்

அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். நாளை அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்திக்கும் மோடி, அவருடன் பல்வேறு விஷயங்கள், இரு தரப்பு உறவுகள், பாதுகாப்புதுறை தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்து பேசுகிறார். அதன்பின் பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வௌ்ளை மாளிகையில் மதிய விருந்து அளிக்க உள்ளார். 

அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்தபின், உலகத் தலைவர் ஒருவருக்கு விருந்து அளிப்பது இதுதான் முதல் முறை. அந்த பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.

சிவப்பு கம்பள வரவேற்பு

இது குறித்து வௌ்ளை மாளிகையின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ பிரதமர் மோடியின் சிறப்பான வருகையை எதிர்நோக்கி ஆர்வமாக இருக்கிறோம். அவருக்காக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க காத்திருக்கிறோம். அதிபர் டிரம்பும், மோடியும் ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ணப்போகிறார்கள்.

முதல் உலகத் தலைவர்

அதிபராக டிரம்ப் வந்தபின், உலகத் தலைவர் ஒருவருக்கு அளிக்கும் முதல் விருந்து இதுவாகும். ஆதலால் இது முக்கியத்துவம் வாய்ந்தது. இரு தலைவர்களும் திங்கள்கிழமை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிறார்கள், அதன்பின், ஊடகங்களைச் சந்திக்கிறார்கள். அதன்பின் சிறப்பான வரவேற்பும், அதைத்தொடர்ந்து விருந்து நிகழ்ச்சியும் நடக்கும். இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு, பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு தீர்வு காண இந்த விருந்து உதவியாக இருக்கும். 

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள், வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுபோன்ற நட்புறவை வளர்க்க அதிபர் டிரம்ப் விரும்புவார். 

அனைத்து விதமான தீவிரவாத்தையும் ஒழிக்க இந்தியாவும், அமெரிக்காவும் உறுதிபூண்டுள்ளன. இதற்காக தீவிரவாத்தை கண்காணிகப்பது, உளவுத்துறை, தகவல்களை பரிமாறுதல், இன்டர்நெட்டை பயன்படுத்துதல் உள்ளிட்ட விவரங்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டு, கூட்டுறவை வலுப்படுத்தி வருகின்றன. இந்த சந்திப்பின் போது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மேலும் புதிய யுத்திகள் குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios