இலங்கை அதிபர் மாளிகையில் கோடிக்கணக்கில் பணம்..கைப்பற்றிய போராட்டக்காரர்கள் - வைரல் வீடியோ

கோத்தபயவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைவதை அறிந்த இலங்கை அரசு, வெள்ளிக்கிழமை  இரவு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

Millions of money in the Sri Lankan President House Protesters captured viral video

பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கையின் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என பிடிவாதம் பிடித்து வந்த கோத்தபய, மக்கள் புரட்சியால், அதிபர் மாளிகையில் இருந்து ஜூலை 9ம் தேதி வெளியேற்றப்பட்டுள்ளார். வரும் 13ம் தேதி அவர், அதிபர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக இலங்கை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கோத்தபயவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைவதை அறிந்த இலங்கை அரசு, வெள்ளிக்கிழமை  இரவு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதற்கு  நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ரயில், பேருந்து மற்றும் வாகன சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி, தலைநகர் கொழும்புவில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் முதலில் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். 

Millions of money in the Sri Lankan President House Protesters captured viral video

மேலும் செய்திகளுக்கு.. பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை

பாதுகாப்பு தடைகளை மீறி அவர்கள் உள்ளே நுழைந்த போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 33 பேர் காயமடைந்தனர். அதில் மூவர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் மாளிகையில் இருக்கும் நீச்சல் குளங்களில், போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகளும், அங்கிருக்கும் கார்களை எடுத்து ஓட்டும் காட்சிகளும் வெளியாகின. 

ஒரு சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  ஒட்டுமொத்த இலங்கையும், பொருளாதார பாதிப்பில் சிக்கித் தவித்து வரும் நிலையில், ஒரே ஒரு குடும்பம், இப்படி எண்ணற்ற சொகுசுக் கார்களை வாங்கிக் குவித்திருந்தது போராட்டக்கார்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Millions of money in the Sri Lankan President House Protesters captured viral video

மேலும் செய்திகளுக்கு.. எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!

இதனிடையே, அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச, ராணுவ தலைமையகத்தில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  கோத்தபயவுக்கு எதிரான போராட்டத்தின் நீட்சியாக, பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என  ரணில் விக்ரமசிங்கேவும் அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சி உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும் என்றும், தற்காலிக அதிபராக சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதிபர் மாளிகையில் உட்புகுந்த மக்கள் அங்கு பதுங்கு குழி இருந்ததை கண்டறிந்து தோண்டியுள்ளனர். அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளளது கண்டறியப்பட்டுள்ளது.இந்த போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios