கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தால் தான் அமெரிக்க அதிபர் டரம்ப் பரிந்துரைத்த  ஹைட்ராக்ஸிகிளோரோகுயின் மருந்தால் உயிர் பிழைத்ததாக மிச்சிகன் மாநில சட்டமன்ற உறுப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .  இந்த மருந்தை பயன்படுத்திய சில மணி நேரங்களில் தான் குணமடைந்ததாக அந்த பெண் உறுப்பினர்  தகவல் தெரிவித்துள்ளார் , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் அமெரிக்காவை இந்த வைரஸ் மிக கொடூரமாக தாக்கியுள்ளது ,  இதுவரையில் மூன்று லட்சத்துக்கும்  அதிகமாகனோர்  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ராக்ஸிகிளோரோகுயின்  என்ற மருந்தை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரை செய்தார் .  இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட  டெட்ராய்டின் மிச்சிகன் மாநில பிரதிநிதி கரேன் விட்செட்

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் கடந்த மார்ச் 12ம் தேதி வீட்டில் தனியே படுத்துக்கொண்டார் ,  இந்நிலையில் மார்ச் 18ஆம் தேதி மருத்துவரை சந்தித்து அவர்  பரிசோதனை செய்து கொண்டார் ,  ஆரம்பத்தில் சாதாரண சளி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மருத்துவர்கள் சாதாரன மருந்துகளையே அவருக்கு பரிந்துரை செய்துள்ளனர் ஆனால் கடந்த மார்ச் 31 அன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது . நோய் தொற்று உறிதியான ஒரு சில மணி நேரங்களில்  அவரது உடல்நிலை மிகவும் மோசமானது ,  கடுமையான  மூச்சுத்திணறலுக்கு ஆளானார், பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அந்த நேரத்தில் ஹைட்ராக்ஸிகிளோரோகுயின்  மருந்தை பயன்படுத்தலாமா கூடாதா என அமெரிக்கா மருத்துவ ஆராய்ச்சியாளர்ளுக்கும் அரசுதரப்பினருக்கும் இடையே வாதம் நடந்து கொண்டிருந்ததால் அப்போது அம்மருந்து கிடைப்பதில் சிரமம் இருந்தது  இருந்தது பின்னர் தடை நீங்கி ஹைட்ராக்ஸிகிளோரோகுயின் கிடைக்க ஆரம்பித்தது .

வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட தனக்கு ஹைட்ராக்ஸிகிளோரோகுயின் மாத்திரை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது , இந் நிலையில் மருந்து கொடுக்கப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நான் குணமடைவதை உணர்ந்தேன் என மிச்சிகன் மாநில பிரதிநிதி கரேன் விட்செட் மிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  ஹைட்ராக்ஸிகிளோரோகுயின் மருந்தால் தான் குணமானதாக  அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார், இந்நிலையில் இவரின் பேட்டியை மேற்கோள் காட்டிய அதிபர் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்  டெட்ராய்டின் மிச்சிகன் மாநில பிரதிநிதி கரேன் விட்செடிற்கு என வாழ்த்துக்கள் நீங்கள் குணமடைந்ததில்  மிக்க மகிழ்ச்சியடைகிறேன்,  இங்களை வாத்துகிறேன் என ட்ரம்ப் பதிவு செய்துள்ளார்.  இந்நிலையில் அந்த பெண் உறுப்பினர்  டிரம்ப் இல்லையென்றால் இந்த மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்காது ,  இதை சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார் , ட்ரம்புக்கு  நன்றி என தெரிவித்துள்ள அந்த பெண் ட்ரம்ப் இல்லை என்றால் நான் உயிருடன் இருந்திருக்கமாட்டேன் என  கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.