மெக்சிகோவில் குழந்தை காப்பகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 17 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 2 மாடிகளை கொண்ட அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் இருந்துள்ளன. 

இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறது நேரத்தில் தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியது. படுக்கையறை மற்றும் பிற அறைகளை சூழ்ந்துகொண்ட புகையால் உறக்கத்தில் இருந்த குழந்தைகளால் வெளியே முடியாமல் கட்டிடத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். உடனே இதுதொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த முயற்சியில் பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த தீ விபத்தில் சிக்கி 17 சிறுவர்கள் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் பரிதாபகாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.