மெர்சிடஸ் காரில் வந்து பெட்ரோல் போட்டவர் திமிராக பணத்தை கீழே வீசிச் சென்ற வைரல் வீடியோ!
காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்த ஒருவர் பணத்தை ஜன்னல் வழியாக வீசி எரிந்துவிட்டு செல்லும் வீடியோ அதிகம் பகிரப்படுகிறது.
ஒருவர் பெருமையாகச் செய்யும் செயல் மற்றொவர்களை சிறுமைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடும் என்பதை உணராமல் நடந்துகொள்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். அத்தகைய சம்பவம் ஒன்று வைரலாகப் பரவிரவருகிறது.
சமீபத்தில், சீனாவில் பெட்ரோல் நிலைய ஊழியரிடம் கார் உரிமையாளர் ஒருவர் அவமரியாதையாக நடந்துகொண்டது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெட்இட் இணையதளத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், ஒரு மெர்சிடஸ் சொகுசு காரில் ஒன்று பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப வருகிறது. அங்கிருந்த பெண் ஊழியர் அந்தக் காரில் பெட்ரோலை நிரப்புகிறார். பின் அந்தக் காரின் உரிமையாளர் காருக்குள் இருந்தபடி பணத்தை ஜன்னல் வழியாக கீழே வீசிவிட்டுச் செல்கிறார்.
பிறகு அந்தப் பெண் ஊழியர் பொறுமையாக கீழே கிடக்கும் பணத்தை பொறுக்கி எடுத்துகொள்கிறார். அந்தப் பெண் ஊழியர் தரையில் போடப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்ட பின் கண்ணீர் சிந்தும் காட்சியும் வீடியோவில் இடம்பெறுகிறது.
Turkey Earthquakes: 17 ஆயிரம் பேர் பலி! துருக்கியை உருக்குலைத்த பயங்கர நிலநடுக்கங்களின் வரலாறு
இந்த வீடியோவை பகிரும் பலரும் பெட்ரோல் நிலையத்தில் பெண் ஊழியருக்கு ஆறுதல் கூனும் வகையிலும், அவரை அவமதித்த கார் உரிமையாளரை கண்டிக்கும் வகையிலும் கமெண்ட் செய்துவருகிறார்கள்.
ஒரு நெட்டிசன், “அந்தப் பெண் கண்ணீரைத் துடைப்பதைப் பார்த்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. மக்களில் சிலர் ஏன் மற்றவர்களை இப்படி நடத்துகிறார்கள்?'' என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “ஒருவர் தன்னைவிடக் எளிமையாவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதுதான் அவரது உண்மையான குணம் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.
வரலாறே காணாத சம்பவம்!.. நிலநடுக்கத்தால் சின்னாபின்னமான துருக்கி, சிரியா, இத்தாலி - 500 பேர் பலி!