Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகள் பெற்றெடுத்தே பிரபலமான குடும்பம்... இங்கிலாந்தில் ஒரு மெகா குடும்பம்!

இங்கிலாந்திலேயே எங்கள் வீட்டில்தான் ஒருநாள் உணவுக்கு அதிகமாகச் செலவாகிறது. அதிகாலை எழுந்தால் இரவு 10 மணி வரை வேலை இருந்துகொண்டே இருக்கும். பகலில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மனைவிக்கு உதவுவது என்று நேரம் சரியாக இருக்கும். இரவில் வேலைக்குச் சென்றுவிடுவேன். ஆனாலும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

Mega family in england
Author
England, First Published Sep 11, 2019, 10:55 PM IST

இங்கிலாந்திலேயே மிகப் பெரிய குடும்பம் எது? பக்கிங்ஹாம் அரண்மனை குடும்பம் என்று சொல்லிவிடாதீர்கள். இங்கிலாந்தில் 21 குழந்தைகளைப் பெற்றெடுத்த 43 வயது சூ ராட்ஃபோர்டு; 47 வயது ராட்ஃபோர்டு தம்பதியின் குடும்பம்தான் மிகப் பெரியது.Mega family in england
இந்தத் தம்பதிக்கு 21-வது குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை பெற்றே இந்தக் குடும்பம் இங்கிலாந்தில் பிரபலமாகிவிட்டது. “20-வது குழந்தைகளோடு இனி குழந்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை இந்தத் தம்பதி முடிவு செய்திருந்தது. ஆனால், மீண்டும் கருவுற்றதால், 21-வது குழந்தையையும் பெற்றெடுத்தது இந்தத் தம்பதி. இந்தத் தம்பதிக்கு 11 மகன்களும் 10 மகள்களும் இருக்கிறார்கள். Mega family in england
14 வயதில் சூ ராட்ஃபோர்டுக்கு  முதல் குழந்தை பிறந்தது. இந்த 29 ஆண்டுகளில் 21 குழந்தைகளை இவர் பெற்றெடுத்துவிட்டார். இவ்வளவு பெரிய குடும்பத்தை எப்படிப் பராமரிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால் சிரித்துக்கொண்டே பதில் கூறுகிறார் ராட்ஃபோர்டு.
“என்னுடைய ஆண்டு வருமானம் ரூ. 45 லட்சம். இவ்வளவு பெரிய குடும்பத்தை நடத்த இது போதவில்லை. வாரத்துக்கு 27 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அரசாங்கம் குழந்தைகளைப் பராமரிக்க வாரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. அதனால் சமாளிக்கிறோம். மாதத்துக்கு 2 பேருக்குப் பிறந்த நாள் வந்து விடுகிறது. கிறிஸ்துமஸுக்கும் அதிகம் செலவாகிறது. மினி பஸ்ஸில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டுபோய் ஆரம்பப் பள்ளியில் விடுவேன். அடுத்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்களை அழைத்துச் செல்வேன். ஒரு நாளைக்கு 18 பாட்டில் பால், 3 லிட்டர் ஜூஸ் தேவைப்படுகிறது.Mega family in england
இங்கிலாந்திலேயே எங்கள் வீட்டில்தான் ஒருநாள் உணவுக்கு அதிகமாகச் செலவாகிறது. அதிகாலை எழுந்தால் இரவு 10 மணி வரை வேலை இருந்துகொண்டே இருக்கும். பகலில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மனைவிக்கு உதவுவது என்று நேரம் சரியாக இருக்கும். இரவில் வேலைக்குச் சென்றுவிடுவேன். ஆனாலும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்தோடு சுற்றுலா சென்று வருவோம். குழந்தைகளுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை” என்கிறார் ராட்ஃபோர்டு.
மெகா குடும்பம்!

Follow Us:
Download App:
  • android
  • ios