Asianet News TamilAsianet News Tamil

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து... 58 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் சீர்குலைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் படகு பயணங்கள் பெரும்பாலும் பெரிய விபத்தில் முடிந்து விடுகிறது.

Mauritania boat capsizes...58 migrants dead
Author
Mauritania, First Published Dec 7, 2019, 6:25 PM IST

ஆப்பிரிக்காவில் அகதிகளை சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 58 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் சீர்குலைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் படகு பயணங்கள் பெரும்பாலும் பெரிய விபத்தில் முடிந்து விடுகிறது.

Mauritania boat capsizes...58 migrants dead

இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருந்து சுமார் 150 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஸ்பெயின் நோக்கி புறப்பட்டது. பல நாட்கள் இடைவிடாத பயணத்துக்கு பிறகு நேற்று முன்தினம் இந்த படகு மவுரித்தானியா நாட்டின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

Mauritania boat capsizes...58 migrants dead

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுதொடர்பாக கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 58 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 74 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios