நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு.. 20-க்கும் மேற்பட்டோர் பலி...!

ஒவோ பகுதியில் முழு கண்கானிப்பு மேற்கொண்டு, இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளன.

 

Mass shooting at Nigeria church kills dozens, says local lawmaker

நைஜீரியா நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரத்த கலவரம் மூண்ட பகுதியாக மாறியது. 

ஓவோ நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு வெடிகுண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தேவாலயத்திற்குள் இருந்த 28 பேர் உயிரிழந்தனர். 

கண்மூடித் தனமான தாக்குதல்:

“இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார்சைக்கிள்களில் வந்தனர். தேவாலயத்திற்குள் வந்ததும், கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்த தொடங்கினர். தேவாலயத்திற்குள் இருந்த பலரை மர்ம நபர்கள் கொன்று குவித்தனர்,” என ஒண்டோ மாநில சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 

Mass shooting at Nigeria church kills dozens, says local lawmaker

தேவாலய தாக்குதலில் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நைஜீரியா நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்து வருகிறது. எனினும், நைஜீரியா நாட்டின் அமைதியான மாநிலங்களில் ஒன்றாக ஒண்டோ இருந்து வந்தது. இந்த நிலையில், ஒண்டோவில் உள்ள தேவாலய தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

பாதுகாப்பு நடவடிக்கை:

தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் ஓவோ பகுதியில் கருப்பு ஞாயிற்றுக் கிழமையாக மாற்றி விட்டது. “எதிர்பாராத நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக மிகுந்த வேதனை அடைந்து இருக்கிறேன். செயிண்ட் பிரான்சிஸ் கத்தோலிக் தேவாலயத்தில் வழிபாடு நடத்திக் கொண்டு இருந்தவர்கள் உயிரிழந்து உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் அமைதியாக வாழ்ந்து வரும் ஒவோ மக்கள், அமைதியை மட்டுமே விரும்புகின்றனர்,” என்று ஒண்டோ மாநில ஆளுனர் அராகுன்ரின் அகெரெடோலு தெரிவித்தார். 

“பொது மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் பாதுகாப்பு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். ஒவோ பகுதியில் முழு கண்கானிப்பு மேற்கொண்டு, இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாதுகாப்பு நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios