வாடிக்கையாளரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த தேள் - திருமண வாழ்க்கை பாழாகிவிட்டதாக புலம்பல்
பிரபல 5 ஸ்டார் ஹோட்டிலில் தங்கியிருந்த ஆண் வாடிக்கையாளரின் அந்தரங்க உறுப்பில் தேள் கொட்டியதால் தனது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் போர்ச்சி என்ற நபர் லாஸ் வேகாஸில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி உள்ளார். அப்போது அறையில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது பிறப்புறுப்பில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த வலி உடல் முழுவதும் பரவியுள்ளது. அப்போது எழுந்து பார்த்த போது தேள் அவரது பிறப்புறுப்பை கடித்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மைக்கேல் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலின் படி 62 வயதான மைக்கேல், லாஸ் வேகாஸில் உள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்று பூச்சிகள் மற்றும் சிலந்திகளால் நிறைந்துள்ளது. இதற்காக ரிசார்ட் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காததால் தேள் கொட்டியது. தேள் கொட்டியதால் மனஉளைச்சல் பிரச்சினை (PTSD) மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மைக்கேல் தெரிவித்துள்ளார். அந்தரங்க உருப்பில் தேள் கொட்டியதால் எங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மைக்கேலின் மனைவி கூறியுள்ளார்.
என்னடா ஆட்டு குட்டிய தூக்கிட்டு போறமாதிரி போறீங்க? முதலையை பைக்கில் தூக்கி சென்ற இளைஞர்கள்
வழக்கறிஞர் பிரையன் விராக் கூறுகையில், தேள் கொட்டியதால் மைக்கேலின் தாம்பத்திய வாழ்க்கையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு வாடிக்கையாளருக்கும் அறையை வழங்கும்போது ஹோட்டல் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்து வழங்குவது அவர்களின் கடமையாகும். ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்யத் தவறிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
உண்மையில் தேள் அங்கு எப்படி வந்தது என்பது முக்கியமல்ல. அங்கு ஆபத்தான பூச்சிகள் மற்றும் விஷத் தேள்கள் இருப்பது ஹோட்டல் ஊழியர்களுக்கு முன்பே தெரியும் என்பது எனது கருத்து. எனது வாடிக்கையாளருக்கு ஹோட்டல் அறையில் தேள் கொட்டியது உண்மை. சம்பவம் நடந்தபோது ஹோட்டலில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது என்ற விஷயத்தை வழக்கறிஞர் விராக் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 90ML படுத்தும் பாடு: படையப்பா ஸ்டைலில் பாம்புடன் டீல் பேசும் போதை ஆசாமி
தனது பிறப்புறுப்பில் தேள் கொட்டியதாகக் கூறியபோது ஹோட்டல் ஊழியர்கள் கேலி செய்துள்ளனர். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சுகாதார மையத்தில் மைக்கேல் சிகிச்சை பெற்றுள்ளார். தேள் கொட்டியதால் பிறப்புறுப்புகளில் காயம் மற்றும் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் எனது குடும்பம், எனது வேலை, அனைத்தின் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு எதிர்காலத்தில் சிகிச்சை தேவைப்படும், நிதி உதவி தேவை. சம்பவத்திற்குப் பிறகு மன அழுத்தத்தால் அவதிப்படுவதாக மைக்கேல் கூறியுள்ளார். எதிர்கால வாழ்க்கைக்காக நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், மனு மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும் மைக்கேல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.