பாத்ரூம்மில் 60 வருடங்களாக கிடந்த மெக்டொனால்ஸ் பிரெஞ்ச் பிரைஸ்.. அப்பறம் என்ன ஆச்சு..?
அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பாத்ரூமை புதுப்பிக்கும் போது, அங்கு சுவரில் 60 வருடங்களுக்கு முன்பு பாதி உண்டு வைக்கப்பட்ட மெக்டொனால்டின் பிரெஞ்ச் பிரைஸ், இன்னும் மிருதுவாக இருந்தது என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பாத்ரூமை புதுப்பிக்கும் போது, அங்கு சுவரில் 60 வருடங்களுக்கு முன்பு பாதி உண்டு வைக்கப்பட்ட மெக்டொனால்டின் பிரெஞ்ச் பிரைஸ், இன்னும் மிருதுவாக இருந்தது என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த ராப் ஜோன்ஸ், தனது சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரது புகைப்படம், 'பழைய துணியில் சுற்றப்பட்ட' உணவைக் காட்டுகிறது. மேலும் விண்டேஜ் பேக்கேஜிங்கில் பாதி முடிக்கப்பட்ட பிரெஞ்ச் பிரைஸ் இருந்தது.குளியலறையின் சுவரில் அவர் கண்டெடுத்த உணவு, 1959 ஆம் ஆண்டு மீண்டும் அவரது வீடு கட்டப்பட்டதிலிருந்து அங்கேயே இருந்துள்ளது என்று அவர் உறுதியாக நம்புகிறார். அந்த பிரெஞ்ச் பிரைஸ் இன்னும் "மிருதுவாக" இருப்பதாக அவர் கூறுகிறார்.
"நாங்கள் தற்போது எங்கள் சமையலறை மற்றும் குளியலறையை புதுப்பித்து வருகிறோம். குளியலறையில் ஒரு சாதனத்தை அகற்றும் போது நான் பிளாஸ்டருக்கு பின்னால் ஒரு துணியை ஒட்டி இருப்பதைக் கவனித்தேன், அதை என் மனைவியைக் காட்ட வெளியே இழுத்தேன்" என்று ராப், அந்த செய்தி சேனலிடம் கூறுயுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நாங்கள் அதை அவிழ்த்து, பழைய மெக்டொனால்டு பை மற்றும் பிரெஞ்ச் பிரைஸ் கண்டபோது மிகவும் ஆச்சரியப்பட்டோம்., ”என்று அவர் கூறினார். அவர் பகிர்ந்துள்ள படத்தில், பல மெக்டொனால்டின் கவர்கள் உள்ளன, ஆனால் அதில் பிரபலமான கோல்டன் ஆர்ச்களுக்குப் பதிலாக, லோகோவில் "நான் வேகமானவன்" மற்றும் "தனிப்பயனாக்கப்பட்ட ஹாம் பர்கர்கள்" போன்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளன.
"எங்கள் வீடு 1959 இல் கட்டப்பட்டது. இது மெக்டொனால்டின் இருப்பிடத்திற்கு மிக அருகில் உள்ளது. மேலும் அது அப்போது தான் திறக்கப்பட்டது. எனவே வீடு கட்டுபவர்களிடமிருந்து அது எங்கள் சுவரில் விழுந்திருக்கலாம் என்று கருதுவதாக அவர் கூறினார். மேலும் இவர் பகிர்ந்துள்ள புகைப்படத்துடன் கூடிய பதிவில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் "நீங்கள், அதிகாரப்பூர்வ ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், "இன்று எத்தனை புதிய வீடுகளில் சிப்ஸ் பாக்கேட்கள், கேடோரேட் பாட்டில்கள், கோக் பாட்டில்கள், துரித உணவுக் கோப்பைகள் உள்ளன என்பது அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் " என்று மற்றொரு பயனர் கூறினார். "நண்பா, வீடு புதுப்பிக்கும் வேலைக்கு பணம் செலுத்த அவற்றை விற்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார்."ஆஹா, இது எனது கடந்த காலத்த்தை நினைவூட்டுகிறது" என்று ஒருவர் எழுதியுள்ளார்.மெக்டொனால்டு உலகின் மிகவும் பிரபலமான துரித உணவு விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும்.