Man facing 15 years in jail for catching his wife

அமெரிக்காவில் தந்து முன்னாள் மனைவியை கள்ளக்கதலனோடு இருக்கையில் கணவன் வேவுபார்த்த நிலையில் அவர்மீது போடப்பட்ட வழக்கில், கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் சீன் டோனீஸ். இவரது மனைவி நேன்சி டோனிஸ். நேன்சி தனது மகனின் ஐபேடை, எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். இது தெரியாத கணவன் டோனீஸ் ஐபேடை வீடு முழுவதும் தேடியிருக்கிறார். எங்கு தேடியும் கிடைக்காததால், தனது ஐபோன் சிக்னல் பைண்டர் மூலம் ஐபேடை தேடியுள்ளார்.

ஐபோனின் சிக்னலை பின் தொடர்ந்து சென்ற கணவன் டோனீஸ். அந்த ஐபேட் சிக்னல் ஒரு வீட்டு வாசலில் காட்டியது. இந்நிலையில் அந்த வீட்டிற்குள் நுழைந்த கணவனுக்கு அந்த வீட்டில் இருந்தது ஒரு அதிர்ச்சி. அந்த வீட்டினுள் தனது மனைவி நேன்சி, அவரது முதலாளியுடன் படுக்கையில் உல்லாசத்தில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த டோனீஸ், அந்த காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவாக்கி அதனை நேன்சியின் உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்.

இந்நிலையில், நேன்சி தனது கணவர் டோனிஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து நேன்சியின் வழக்கறிஞர் கூறுகையில், நேன்சி அவரது கணவரை பிரிந்து விட்டதாக நினைத்து, நேன்சியின் முதலாளி அவருடன் தொடர்பு வைத்திருந்தார். நெஞ்சி என்ன வேண்டுமானாலும் செய்வார். நேன்சியின் தனிப்பட்ட விஷயங்களை செல்போனில் பதிவு செய்தது தவறு என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் டோனிசிற்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார்.