கூகுள் மேப்-ல் இப்படிகூட வெளியாகுமா? விவாகரத்தில் முடிந்த விவகாரம்...

பெரு நாட்டைச் சேர்ந்த ஒருவர், தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் போனதால், கூகுள் மேப்-ன் உதவியை நாடியுள்ளார்.

Man divorces wife after seeing her cuddling with lover on Google Maps

பெரு நாட்டைச் சேர்ந்த ஒருவர், தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் போனதால், கூகுள் மேப்-ன் உதவியை நாடியுள்ளார். அப்போது கூகுள் மேப் வழியை பின்தொடர்ந்த அவர், ஒரு இடத்தில் சாலையோரத்தில் உள்ள பார்க்கில், ஒரு ஜோடி ரொமான்சில் ஈடுபட்டிருந்த காட்சியைக் கவனித்திருக்கிறார். Man divorces wife after seeing her cuddling with lover on Google Maps

அந்த காட்சியை பெரிதுபடுத்தி பார்த்த அவர், தன்னுடைய மனையுடன், அவரது கள்ளக்காதலர் ஒருவர் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். அந்த காட்சியை, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதை ஆதாரமாக வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன் மனைவியை கூகுள் மேப் ஆதாரம் கொண்டு மனைவியை அவர் விவாகரத்தும் செய்துள்ளார். கூகுள் மேப்பில் கண்ட அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பதிவிலும் அவர் பதிவிட்டுள்ளார்.

Man divorces wife after seeing her cuddling with lover on Google Maps

அவரது இந்த பதிவை கண்ட பலரும், ஆச்சரியம் அடைந்துள்ளனர். இப்படி கூட கூகுள் மேப்-ல் காட்சிகள் பதிவிட முடியுமா? என பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இன்னும் என்னென்ன காட்சிகள் எல்லாம் கூகுள் மேப்-ல் பதிவாகுமோ? என பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios