கரப்பான் பூச்சியை கொல்ல போய்... தோட்டத்தை வெடி வச்சி தூக்கின ஆசாமி...!

நம்ம ஊரில் ’மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின மாதிரின்னு’ ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதை பிரேசிலைச் சேர்ந்த நபர் ஒருவர் உண்மையாக்கியிருக்காரு. பிரேசிலைச் சேர்ந்த சீசர் ஷ்மிட்ஸ் என்ற நபரின் மனைவி வீட்டில் கரப்பான் பூச்சியின் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் கூறி வந்துள்ளார். எனவே கரப்பான் பூச்சிகளை அழிக்க முடிவு செய்த சீசர், ஒவ்வொரு கரப்பான் பூச்சியா தேடி எப்போ கொல்லுறது. சரி கரப்பான் பூச்சி கூட்டையே கண்டுபிடிச்சி அழிச்சிட்டால் பிராப்ளம் ஓவர்ன்னு முடிவு பண்ணியிருக்காரு. 

அங்க தான் பிரச்னையே ஆரம்பிச்சிருக்கு, தோட்டத்தில் இருந்த கூட்டை அழிக்க துளைக்குள் பெட்ரோல் ஊற்றி, ஒவ்வொரு தீக்குச்சியா கொளுத்தி போட்டு பற்றவைக்க பார்த்திருக்கார். சரியா 3வது குச்சியை கொளுத்தி போடும் போது, மொத்த தோட்டமும் பெரிய வெடி சத்தத்தோட சுக்கு நூறா வெடிச்சிடுச்சி. தோட்டத்தையே காலி பண்ணாலும் சீசரால கரப்பான் பூச்சியை காலி பண்ண முடியல. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை 2.7 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். சீசரின் இந்த புத்திசாலித்தன ஐடியா பல வேடிக்கையான கமெண்ட்களையும் வாங்கி வருகிறது. <