மோடி அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த மலேசியா...!! 23 ஆயிரம் இந்தியர்களை அதிரடியாக வெளியேற்றுகிறது...!!
ஆயிரக்கணக்கானோர் மலேசியாவில் புத்ராஜெயா நகரில் இருக்கும் குடியுரிமை அலுவலகத்தில் திரண்டு வருகின்றனர் .
மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 22,964 இந்தியர்களை வெளியேற்ற அந்நாடு தயாராகிவருகிறது இந்தியாவில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் நிலையில் மலேசியா இந்நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது உள்நாட்டில் சந்திக்கும் நெருக்கடி மற்றும் வேலை இல்லாத காரணத்தினால் அயல் நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் பல்வேறு சர்வதேச நாடுகள் தங்கள் நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது அதன் முன்னோட்டமாக இந்திய குடியுரிமை திருத்த சட்டம் , மற்றும் தேசிய குடிமக்கள் பதிவுவேடு முறையை இந்தியா தொடங்கியுள்ளது . இந்நிலையில் மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப கடந்த ஆகஸ்டு மாதம் மலேசிய அரசு அறிவித்தது . இதனையடுத்து ஏராளமானோர் குடியுரிமை அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர் . மலேசியாவில் கல்வி-தொழில் போன்றவற்றிற்காக சட்டவிரோதமான அவர்களை தண்டிப்பதை கைவிட்டு அவரவர் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு அரசு புதிய திருப்பத்தை அறிவித்திருந்தது . அதன்படி டிசம்பர் 31-க்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தங்கள் குடி ஆவணங்களை குடியுரிமை அலுவலகத்தில் காண்பித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துதரப்படும் என அது தெரிவித்திருந்தது .
இந்த அறிவிப்பை பலர் ஆரம்பக்கட்டத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை தற்போது கடைசி நேரம் நெருங்கியுள்ள நிலையில் , ஆயிரக்கணக்கானோர் மலேசியாவில் புத்ராஜெயா நகரில் இருக்கும் குடியுரிமை அலுவலகத்தில் திரண்டு வருகின்றனர் . தாங்களாகவே முன்வந்து சொந்த நாட்டிற்கு செல்வதற்காக தங்கள் ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்து வருகின்றனர் . இதில் சுமார் 53 ஆயிரத்து 328 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் என்றும் 38 ஆயிரத்து 534 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் சுமார் 22 ,964 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு பேர் இந்தியர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.