சிறிய நாடான  மலேசியாவால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க முடியாது என மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார் .  பாமாயில்  இறக்குமதி செய்ய வேண்டாமென மலேசியாவுக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் .  காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ,  மற்றும் இந்திய குடியுரிமை சட்டம் ,  தேசிய குடிமக்கள் பதிவேடு  என இந்தியா கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும்  தொடர்ந்து மலேசிய பிரதமர் மகதீர் முகம்மது கடுமையாக விமர்சித்து வந்தார் .  அவரின் கருத்துக்கள் இந்திய மக்களை தூண்டும் வகையிலும் ,  அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும்  இருந்து வந்தது .  முதலில் இதை கண்டுகொள்ளாத இந்தியா , பின்னர்  அவர் தொடர்ந்து அத்துமீறி வருவதை கண்டித்ததுடன் ,  இந்தியாவிற்கு எதிராக கருத்து கூறுவதை  தவிர்க்கும்படி எச்சரித்தது.

மகாதீர் முகமது அதை கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை ,  தொடர்ந்து தன் கருத்துக்களின் மூலம் இந்தியாவின் மீது வெறுப்பை உமிழ்ந்து வந்தார் .   மகாதீர் முகம்மது கருத்தைத் தொடர்ந்து இனி  மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு இந்திய அறிவுறுத்தியது,  இதனால் மலேசியா நிறுவனங்களிடமிருந்து கச்சா , பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் உள்ளிட்ட பொருட்களை  வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக  நிறுத்திவிட்டன.  பாமாயில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக இந்தோனேசியாவில் இருந்து கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய இந்தியா தொடங்கியுள்ளது .  இந்தியாவிற்கு அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்து அதில் பெரும் வருமானம் ஈட்டி வந்தது மலோசியா, ஆனால் தற்போது அந்த வருமானம் முழுவதுமாக தடைபட்டுள்ளது . 

அத்துடன் அந்நாட்டில் பாமாயில் தேக்கம் அதிகரித்துள்ளது இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள மலேசியா , பொருளாதார ரீதியில் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது .  இதுகுறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் பிரதமர் மகதீர் முகம்மதுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .  இந்நிலையில் அவரை லங்காவியில் சந்தித்த செய்தியாளர்கள் ,  பாமாயில் இறக்குமதி தடை குறித்து கேள்வி எழுப்பினார் ,  அதற்கு பதில் அளித்து அவர் ,  இந்தியாவுக்கு பதிலடி தரும் அளவிற்கு  மலேசியா பெரிய நாடு அல்ல என கூறியுள்ளார் .  மிகச் சிறிய நாடான தங்களால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியாது என்றார் . ஆனாலும் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்கும் வழிவகைகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார் .