malayali is having shop in Saudi and kuwait

உலகின் எந்த மூலைக்கு போனாலும், இமயமலையில் கூட மலையாளி டீக்கடை நடத்திக் கொண்டுஇருப்பார் என பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அதுபோல, சவுதி-குவைத் எல்லையில் ஒரு மலையாளி மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ். இவர் சவூதி-குவைத் எல்லையில், பாலைவனமாக இருக்கும் ஹபர் அல் பாதின் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இது குறித்து ராஜீவ் கூறுகையில், “ முதல் வளைகுடாப் போரின் போது, 25க்கும் மேற்பட்ட ஈராக் குடும்பங்கள் குவைத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் ராஜீவ் கடையைச் சுற்றி இருக்கிறார்கள். போரின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈராக் நாட்டவர்கள் தஞ்சமடைந்த போது, அவர்களை சவுதி அரசு அரவணைத்து குடியுரிமை அளித்தது. இதில் பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்ட நிலையில், சிலர் இந்த பாலைவனத்திலேயே தங்கிவிட்டனர். அவர்களுக்காக அரசு சிறிய குடிசை வீடுகளையும், பள்ளியையும் உருவாக்கியுள்ளது. இந்த குடியிருப்புமக்களை நம்பி ராஜீவ் மளிகை

பாலவனத்தில் ராஜீவ் வசித்த போதிலும், அவர் வீட்டில் ஏ.சி. இல்லை. ஏர் கூலர் இருந்தாலே ராஜீவ் வாழும் பகுதியில் வசதியானவர்களாக கருதப்படுகிறார்களாம். இந்தப் பகுதியில் வசிக்கும் ஈராக் மக்கள் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.