macron elected prsesident of france

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வலது முன்னணி தேசிய கட்சித் தலைவர் இமானுவேல் மேக்ரோன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டத் தேர்தலில் இமானுவேல் மேக்ரோனும், வலதுசாரி கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் லி பென்னும் வெற்றி பெற்றனர்.

ஆனால் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத லி பென் மோசடி செய்து இமானுவேல் வெற்றி பெற்றிருப்பதாகவும், இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

(இமானுவேல் மற்றும் அவரது 65 வயது மனைவி)

39 வயதான மேக்ரோன் 65 வயது உடைய தனது பள்ளி ஆசிரியை மறுமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.