பாகிஸ்தானில் 16 சர்வதேச பயங்கரவாதிகள்...!! உளறி கொட்டிய இம்ரான்கான், சுற்றி வளைக்கும் சர்வதேச நாடுகள்...!!

7 பேர் தங்கள் மீது விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளில்  இருந்து விலக்கு அளிக்க கோரி ஐநா மன்றத்தில் விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தனர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Luskar- e - thoiba terrorist leader masood azar  absconding from Pakistan - Pakistan says

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசார் திடீரென மாயமாகி விட்டதாக பாகிஸ்தான் தகவல் தெரிவித்துள்ளது .   சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சையத்திற்கு  அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உள்ள நிலையில் ,  பயங்கரவாதி  மசூத் அசார் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் .  இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்,  பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார்.  

Luskar- e - thoiba terrorist leader masood azar  absconding from Pakistan - Pakistan says

இவரின் ஜெய்ஷ்-இ- முகமது,  இயக்கம்தான் பிப்ரவரி மாதம் காஷ்மீரில் புல்வாமாவில் துணை ராணுவப் படையின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது . அதில் துணை ராணுவ படையினர் 40 பேர் பலியாகினர் ,  அச்சம்பவத்தை அடுத்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி அறிவித்தது , இந்நிலையில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதுடன் ,  பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதேயில்லை என கூறிவரும்  சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுத்தது . 

Luskar- e - thoiba terrorist leader masood azar  absconding from Pakistan - Pakistan says

இந்நிலையில்  சர்வதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பின் சார்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் மற்றும்  அவரது குடும்பத்தினரை தற்போது காணவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன .  மேலும் இது குறித்து தெரிவித்துள்ள பாகிஸ்தான்,   தங்களது நாட்டில் 16 சர்வதேச பயங்கரவாதிகள் மட்டுமே இருந்தனர் , அவர்களில் 7 பேர் இறந்துவிட்டனர்  என்றும் மற்ற ஒன்பது பேரில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சையது ,  அல் கொய்தா அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய அப்துல்ரகுமான் உள்ளிட்ட 7 பேர் தங்கள் மீது விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளில்  இருந்து விலக்கு அளிக்க கோரி ஐநா மன்றத்தில் விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தனர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் மசூத் அசார் மாயமாகிவிட்டார் என பாகிஸ்தான் கூறுவதை சர்வதேச நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios