விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேச்சு... முன்னாள் அமைச்சர் அதிரடி கைது!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 9, Oct 2018, 9:39 AM IST
LTTE comment...Sri Lanka former minister arreste
Highlights

விடுதலைப்புலிகள் பற்றி புகழ்ந்து பேசிய இலங்கை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் பற்றி புகழ்ந்து பேசிய இலங்கை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர். விஜயகலா மகேஸ்வரன்(45).

 

தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பள்ளிக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சமூக கொடுமைகள் எல்லாம் விடுதலைப் புலிகள் ஆட்சி காலத்தில் நடந்ததில்லை. நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் மீண்டும் விடுதலைப் புலிகள் கை ஓங்க வேண்டும் என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ராஜபக்‌ஷே தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

இதையடுத்து விஜயகலாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பிறகு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் அவருக்கு எதிராக போலீசாரின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கொழும்புவில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவில் விஜயகலா நேற்று ஆஜராகினார். அப்போது அவரை போலீசார் அதிரடியாக செய்தனர். பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

loader