தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க பக்தர்கள் மூலம் வேலையை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கிவிட்டார்கள். அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில், பிடதியிலிருந்து ஆன்மிகப் பயணம் என்று கிளம்பி, உத்தரப்பிரதேசத்தில் சில நாள்கள் தங்கியுள்ளார் நித்தியானந்தா. 

அங்கு இருந்து தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளார். இந்து நாடான நோபாளத்தில் அரசு அதிகாரிகள் நித்தியானந்தாவை இந்து மதத் தலைவராகக் கருதி, ராஜமரியாதையுடன் அவரை காட்மாண்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காட்மாண்ட் விமானநிலையத்திலிருந்து தனி விமானம்மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தன் தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா.

 

அவருடன் இரண்டு பெண் சீடர்களும், ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகளும் உடன் சென்றுள்ளனர். அதற்குப் பிறகு மேலும் சிலர் அந்தத் தீவுக்குச் சென்று ஐக்கியமாகியுள்ளனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 27 பேர் கிளம்பி, அந்தத் தீவில் தஞ்சமடைந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள். ஆக பெண் பக்தைகளுக்கு தனித்தீவில் சொர்க்கத்தை காட்டி வருகிறார் நித்யானந்தா