lockdown in china: சீனாவில் மீண்டும் லாக்டவுன்: புதிய வைரஸா? 10 முக்கியத் தகவல்கள்
lockdown in china:சீனாவில் வடகிழக்கு மாநிலமான ஜூலின் உள்ள சாங்சன் நகரில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 90 லட்சம் மக்கள் வசிக்கும் சாங்சுன் நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று ஏ.பி. செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் வடகிழக்கு மாநிலமான ஜூலின் உள்ள சாங்சன் நகரில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 90 லட்சம் மக்கள் வசிக்கும் சாங்சுன் நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று ஏ.பி. செய்திகள் தெரிவிக்கின்றன.
1. சீனாவின் வடகிழக்கில் உள்ளது ஜூலின் மாகாணம். இதந் தலைநகரான சாங்சுன் நகர் மிகப்பெரிய தொழில் மையமாகும். ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்
2. சாங்சங் நகரில் புதன்கிழமை திடீரென 48 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
3. சாங்சன் நகரில் வியாழக்கிழமை பாதிப்பு சற்று லேசாக அதிகரி்த்து, 160 பேர் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டனர். 142 பேர் அறிகுறிகளுடன் உள்ளனர்.
4. அனைவருடைய ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு மரபணுபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
5. ஜூலன் மாநில சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் “ சாங்சன், ஜுலன் நகர் முழுவதும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழும் மக்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸின் பிஏ2 வகையாக இருக்கலாம் எனசந்தேகிக்கிறோம். “ எனத் தெரிவித்துள்ளது.
6. கடந்த 2020ம் ஆண்டுக்குப்பின் சீனாவில் இந்த வாரத்தில் மட்டும் கொரோனா வைரஸால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 வாரங்களுக்கு முன் 300 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்
7. சீனாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கொரோனா வைரஸால் 1369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
8. ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்ககள் புதிய வைரஸ் பரவுவதுகுறித்து விழிப்படைந்து மக்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசித்து வருகிறார்கள்.
9. ஷாங்காய் நகரில் அனைத்துப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10. பெய்ஜிங்கில் பல்வேறு குடியிருப்புவளாகத்தில் வெளிநபர்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மக்கள் தாங்களாகவே லாக்டவுனைகொண்டு வந்து வீட்டுக்குள் உள்ளனர்.
பல நாடுகளில் கொரோனா வைரஸ் 3-வது அலை, 4-வது அலையை நோக்கி நகர்ந்து வருகிறது ஆனால் முடிவுக்கு வரவில்லை. இந்த கொரோனா வைரஸால் சீனாவில் பாதிக்கப்பட்டதைவிட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும்தான் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
ஐரோப்பாவில் பல நாடுகளிலும், அமெரிக்காவிலும் உள்ள மக்கள் பெரும்பலானோர் 2 தடுப்பூசி செலுத்தியபின்பு, பூஸ்டர் தடுப்பூசியும் இன்னும் கொரோனா மீதான அச்சம் போகவில்லை. இப்போது சீனாவில்அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்துகிறது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன, எப்போதிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.