நன்னீர் மற்றும் கடலில் மீன் பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 7-வது இடத்திலும் உள்ளதாக உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு எல்லைகளில் மீன் பிடிக்கும் எண்ணிக்கையில் சீனா, அதிக படகுகளுடன் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆசியா முழுவதும் சுமார் 3.5 மில்லியன் மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சீனாவில் மட்டும், 1.07 மில்லியன் படகுகள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அங்கு 6,86,766 மோட்டார் படகுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீனாவைத் தொர்ந்து இந்தோனேஷியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பெரு, இந்தியா, வியட்நாம், மியான்மர், நார்வே உள்ளன.

கடந்த 2014 ஆம் வருடம் மட்டும் சுமார் 418 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை, சீனா அரசு மீனவர்களின் மானியம் போன்ற விஷயங்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்குள். 2.3 மில்லியன் டன் வரை மீன் பிடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனர்கள் அதிகமாக மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை உட்கொள்வதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.