அமெரிக்கத் திரையுலகின், பாரம்பரியமிக்க 74-வது ஆண்டின் Golden Globe விருதுகள் இன்று வழங்கப்பட்டன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 4 விருதுகளை "La La Land" திரைப்படம் அள்ளிச் சென்றது. 

அமெரிக்க நட்சத்திரங்களின் ஆஸ்கர் விருதுகளுக்கு முன்னோட்டமாக விளங்கும் Golden Globe விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டன.

வண்ணமயமான லேசர் விளக்குகள் ஒளி வீசும் அழகிய கனவுப் பிரதேசமான Beverly Hills அரங்கில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது, விருதுக்கான நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மேடையில் தோன்றி, தாங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தனர். 

காதல், இசை, நகைச்சுவை என மனதை உருக்கும் வகையில் வெளியாகி வெற்றி பெற்ற "La La Land" திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது. அதற்கேற்ப சிறந்த நடிகருக்கான விருது "La La Land" திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய Ryan Gosling-க்கு வழங்கப்பட்டது.

அப்படத்தின் இயக்குனர் Damien Chazelle சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்றார். சிறந்த இசை மற்றும் பின்னனி இசை உள்ளிட்ட விருதுகளை இப்படத்தின் இசையமைப்பாளர் Justin Hurwitz-க்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 4 விருதுகளை "La La Land" திரைப்படம் அள்ளிச் சென்றது. 

துணை நடிகருக்கான விருது Nocturnal Animals படத்தில் நடத்த Taylor-Johnsonக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது Fences திரைப்படத்தில் நடித்த Viola Davis க்கும் வழங்கப்பட்டது. இதேபோல், சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் Fences திரைப்படம் வென்றது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருது Zootopia படத்துக்கு வழங்கப்பட்டது.