பாக்-கை விட்டு வெளியேறிய கானின் சகாக்கள்.. வெளிநாட்டுக்கு தப்பிக்க இம்ரான்கான் திட்டம்..??
குறைந்தது எட்டு அமைச்சர்களாவது இப்போது நாட்டை விட்டு வெளியேறுவார்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொய்த் யூசுப்பும் விரைவில் வெளியேற உள்ளார், ஏற்கனவே இம்ரானின் குழந்தைகள் லண்டனில் உள்ளனர், ஒரு கட்டத்தில் அவரும் அங்கு சென்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என விமர்சித்துள்ளார். இது பாக்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கமான அதிகாரிகள் ஒவ்வொருவராக நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் இம்ரான்கானும் விரைவில் வெளியேறுவார் என தகவல் வெளியாகி வருகிறது. அவரது ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் இவ்வாறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும் அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மார்ச் 25 அல்லது 28 ஆம் தேதி பாக் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. அதாவது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக இம்ரான்கான் பதவி விலகுவார் என்றும் இல்லை இல்லை அவர் வாக்கெடுக்குப்புக்கு பின்னரே பதவி விலகுவார் என்றும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் நாற்காலியை விட்டு விலகுகிறாரோ இல்லையோ அவரது முன்னாள் அதிகாரிகள், நெருங்கிய நண்பர்கள் வெளியேற தொடங்கிவிட்டனர் என பாகிஸ்தான் பத்திரிகைகள் பரபரக்கின்றன.
அந்த வரிசையில் இம்ரானின் முன்னாள் அரசியல் ஆலோசகராக இருந்த ஷஜாத் அக்பர், தலைமைச் செயலாளர் அசம்கான் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது ஆகியோர் பாகிஸ்தானை விட்டு வெளியேறியதாக செய்திகள் வருகின்றன. தற்போது இந்த மூவருமே அதிகம் பேசப்படுபவர்களாக இருந்து வருகின்றனர்.அதற்கான காரணம் என்ன என்பதை விரிவாக காணலாம் :-
சஜாத் அக்பர்:
அக்பர் ஊழல் மற்றும் உள்விவகாரங்களில் இம்ரானின் ஆலோசகராக இருந்தார், கான் அவரை பிரிட்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்து வந்திருந்தார். ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்ரான் விரும்பினார். பின்னர் சிறையிலிருந்து சிகிச்சைக்காக லண்டன் சென்றார் நவாஸ் ஆங்கேயே தங்கிவிட்டார். அவரது சகோதரர் ஷாபாஸ் மற்றும் மகள் மரியம் மட்டும் நாட்டில் தங்கியிருந்தனர். அக்பர் பல நவாஸ் குடும்பம் செய்த ஊழல் தொடர்பாக பல முறை செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளார். பலமுறை நவாஸ் ஷரிப் குடும்பம் குற்றவாளி என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. தற்போது ரிங் ரோடு, சர்க்கரை ஊழல், வீட்டு வசதி போன்ற ஊழல்களில் இம்ரான் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் எழுப்பியுள்ளன. ஆனால் இது எதிர்க்குமே வாய்திறக்காத மௌனம் காத்து வந்தார் அக்பர், பின்னர் ஜனவரி இறுதியில் அக்பர் தனது பதிவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது, அதன் பிறகு அவரை காணமுடியவில்லை, தற்போது அவர் குடும்பத்துடன் லண்டன் பறந்து விட்டதாக கூறப்படுகிறது.
நீதிபதி குல்சார் அஹமது:
குல்சர் அகமது பல ஊழல் வழக்குகளின் தீர்ப்புகளை நிறுத்தி வைத்தவர் ஆவர். அதில் பெரும்பாலானவை அரசுக்கு எதிரான வழக்குகள் ஆகும். இவரின் நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் ராணுவத்தை கோபப் படுத்துவதாக மாறியது, இராணுவம் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். ராணுவ உயர் அதிகாரிகள் செல்வத்தில் செழிக்கின்றனர் என்றும் கூறினார். இந்நிலையில் குல்சரின் குடும்பம் கடந்த ஜனவரி மாதம் அவர் ஓய்வு பெறுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. இந்நிலையில் அவரும் இந்த மாத தொடக்கத்தில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
அசம் கான்:
இம்ரானின் அரசாங்கம் நான்காம் காலாண்டில் ஆட்சியில் உள்ளது. இம்ரானின் முடிவிற்கு பின்னால் அவரது தலைமை அல்லது முதன்மைச் செயலாளர் ஆசம் கான் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உத்தரவின் பேரில்தான் அனைத்து பெரிய பத்திரிக்கையாளர்களையும் சேனல்கள் வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இவர்களில் ஹமீத் மிர் , சலீம் ஷாபி, போன்ற ஊடகவியலாளர்கள் அடங்குவர். தற்போது அந்த மூத்த பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்களில் இம்ரான்கான் மற்றும் அவரது அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபசல் உர் ரஹ்மான் இம்ரான் பின்னணியிலிருந்து அசம் கானே நாட்டை அழிவித்தார் என்று விமர்சித்து வருகிறார். தற்போதைய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அசாம் கடந்த வெள்ளிக்கிழமை துபாய் சென்றடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து விமானம் மூலம் அவர் அமெரிக்காவின் மியாமிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இம்ரானின் தலைமைச் செயலாளர் அசம்கான் பதவியை ராஜினாமா செய்யாமலேயே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானிய வழக்கறிஞர், பத்திரிகையாளர் மற்றும் சமூக சேவகர் டாக்டர் சஜித் தாராட், இம்ரானின் நெருங்கிய நண்பர்கள் அவரை விட்டு வெளியேறும் படலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. குறைந்தது எட்டு அமைச்சர்களாவது இப்போது நாட்டை விட்டு வெளியேறுவார்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொய்த் யூசுப்பும் விரைவில் வெளியேற உள்ளார், ஏற்கனவே இம்ரானின் குழந்தைகள் லண்டனில் உள்ளனர், ஒரு கட்டத்தில் அவரும் அங்கு சென்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என விமர்சித்துள்ளார். இது பாக்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.