கொரோனா வைரஸ் பாதித்த பகுதி மற்றும்  நாடுகளுக்குச் சென்று வந்த தகவலை மறைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா எச்சரித்துள்ளார் .  கொரோனா  பாதித்தவர்களின் எண்ணிக்கை கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் 90 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி உள்ளது .  சீனாவில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .  சுமார்  85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர் . 

சர்வதேச அளவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த வைரசுக்கு ஆளாகியுள்ளனர்.  உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளது .  இதற்கிடையில்  இந்தியாவிலும்  இந்த வைரஸின் தாக்கம் தொடங்கியுள்ளது .  இந்நிலையில் கேரளாவில் வைரஸ் பார்த்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது .  மற்ற மாநிலத்தவர்களை  காட்டிலும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தமாக அதிக அளவில் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி வரும் நிலையில் அவர்கள் மூலமாக வைரஸ்  கேரளாவில் பரவி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.  மற்ற மாநிலத்தை காட்டிலும் கேரளாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.   அதேபோல் கொரோனாவால் பாதித்தவர்களை கேரள மருத்துவர்கள்   சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கி அவர்களை குணமாக்கி வருகின்றனர். 

ஆனாலும்  வைரஸ் பாதித்தவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .  அதேபோல் வெளிநாட்டில் இருந்து கேரள மாநிலம்  திரும்புவோர் தங்கள் வெளிநாட்டிலிருந்து வந்த உண்மையை  வெளியில் கூறாமல் கமுக்கமாக இருந்து வருகின்றனர் .  எனவே இதன் மூலமாக இன்னும் பலருக்கு வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் வைரஸ் பாதித்த பகுதி மட்டும் நாடுகளுக்குச் சென்று வந்தால் அந்த தகவலை  உடனே கேரள மாநில  சுகாதாரத் துறைக்கு  தெரிவிக்க வேண்டும் என அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது .  இதையும் மீறி  சென்று வந்த தகவலை மறைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா எச்சரித்துள்ளார் .  மேலும் தெரிவித்துள்ள அவர் ,  பயண தகவலை மறைப்பது குற்றமாகும் .  இப்படி தகவலை மறுப்போர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார் .