இந்தியாவால் தேடப்பட்டு வந்த  காலிஸ்தான் விடுதலை படைத்தலைவர்  ஹர்மித் சிங் பாகிஸ்தானில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் லாகூரில் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் என்பது,  சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஓர் அரசியல் இயக்கமாகும்.  சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் அமைக்கப்பட்டது காலிஸ்தான் இயக்கம் .

 

இந்த அமைப்பின்  முன்னாள் தலைவர் ஹர்மிந்தர் மிண்டூ  மறைவுக்குப் பின்னர்  கடந்த  2018ஆம் ஆண்டு  அந்த இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார் ஹர்மிந்தர் சிங் ,   பாகிஸ்தானை போல பஞ்சாப் மாநிலத்தையும் பிரித்து  காலிஸ்தான் என்ற தனிநாடு தரவேண்டுமென போராட்டம் நடத்தி வருகின்றனர் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பினர்.  இந்நிலையில்  கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் கொலை வழக்கில்   தேடப்பட்டு வந்தார் ஹர்மிந்தர் சிங்,  அதேபோல் 2018ம் ஆண்டு அமிர்தசரஸில் மத வழிபாட்டின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில்  3 பேர் கொல்லப்பட்டனர் அந்த வழக்கிலும் இவருக்கு தொடர்புள்ளதாக தெரிகிறது.  முன்னதாக ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவராவார் ஹர்மிந்தர் சிங்,  ஹாப்பி பி.எச்.டி என்று அழைக்கப்பட்டு வந்தார். 

இந்நிலையில் சர்வதேச போலீஸ் விசாரணை அமைப்பான இன்டர்போல் கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அறிவித்தது .  இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக  இருந்த  ஹர்மிந்தர் சிங் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் லாகூரில் உள்ள தேரா சாகல் குருத்வாராவில் உள்ள கடத்தல் கும்பல் ஒன்றுடன் ஏற்பட்ட மோதலில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன .  இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.  தற்போது இவர் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது .