அரசு அலுவலகத்தை குறி வைத்து திடீர் தாக்குதல்... 43 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறி வைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்தி தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

Kabul govt compound attack...43 people killed

ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறி வைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்தி தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அரசு பொதுப்பணித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நலன் சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தை குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை அரங்கேற்றினர். Kabul govt compound attack...43 people killed

அரசு அலுவலக நுழைவு வாயில் அருகே காரை ஓட்டி வந்த தீவிரவாதிகள் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். பின்னர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட 2 தீவிரவாதிகள் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தனர். மேலும் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினர். பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். சிலர் தப்பிக்க அரசு கட்டடத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக குதித்தனர்.

 Kabul govt compound attack...43 people killed

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்தனர். இருவருக்கும் இடையே சுமார் 3 மணிநேரமாக துப்பாக்கிச்சண்டை நீடித்து வந்தது. இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பொதுமக்கள் தரப்பில் 43 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழ்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios