கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்லார். இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னர் சார்லஸிடம் புகார் கொடுக்க இருக்கிறார்.
Justin Trudeau seeks King Charles Help: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அன்டை நாடான கனாடாவுடன் நேருக்கு நேர் மோதி வருகிறார். கனடா இறக்குமதி பொருட்கள் மீது 25% வரி விதித்து உத்தரவிட்டார். அமெரிக்காவிற்கு கனடா தேவையில்லை என்று கூறிய டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து மற்றொரு மாகாணமாக மாற்றி விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
டொனால்ட் டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு கனடாவில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் அரச தலைவரான மன்னர் சார்லசை இன்று சந்திக்கிறார். அப்போது கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டும் டிரம்ப் குறித்து பேச இருக்கிறார். மன்னர் சார்லஸின் கட்டுப்பாட்டின் கீழ் இங்கிலாந்து மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா, ஜமைக்கா உள்பட மொத்தம் 15 நாடுகள் உள்ளன.
ஜஸ்டின் ட்ரூடோ சொன்னது என்ன?
இந்நிலையில், லண்டனில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, ''கனடா மற்றும் கனேடியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி எப்பொழுதும் விவாதிப்போம். மன்னரது மாட்சிமையுடன் அமர்வதை நான் எதிர்நோக்குகிறேன். மேலும் கனேடியர்களுக்கு நமது இறையாண்மை மற்றும் ஒரு தேசமாக நமது சுதந்திரத்திற்காக நிற்பதை விட வேறு எதுவும் முக்கியமானதாகத் தெரியவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.
Aliens: செப்டம்பர் 1ல் பூமிக்கு வரும் ஏலியன்கள்! பேரழிவு ஏற்படும்! டைம் டிராவலர் கணிப்பு!
அப்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை டிரம்ப் சந்தித்தது குறித்தும், வெள்ளை மாளிகையில் நடந்த சம்பவம் குறித்தும் ஜஸ்டின்ட்ரூடோவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் "நான் ஜெலென்ஸ்கியுடன் நிற்கிறேன்," என்று கூறினார்.
மன்னர் சார்லஸ் மீது கனடா மக்கள் அதிருப்தி
இதற்கிடையில், டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்கள் குறித்து மன்னர் சார்லஸ் கருத்து தெரிவிக்காததால் கனடா மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் மன்னர் மீது பலரும் அதிருப்தியை வெளிக்கட்டியுள்ளனர். கனடா பிரதமரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மன்னர் செயல்பட முடியும் என்று பலர் கூறியுள்ளனர். ''கனேடிய இறையாண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுமாறு கனடா அரசு அரச தலைவரிடம் (மன்னர்) கேட்க வேண்டும்" என்று முன்னாள் ஆல்பர்ட்டா பிரீமியர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
கனடா மக்கள் டிரம்பை தீவிரமாக உள்ளனர். கனடாவைச் சேர்ந்த 2,00,000க்கும் மேற்பட்ட மக்கள் டிரம்பின் ஆலோசகரும், நெருங்கிய நண்பருமான எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் நாடாளுமன்ற மனுவில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவில் தரையிறங்கிய அமெரிக்கத் தனியார் நிறுவனம்! விண்வெளியில் புதிய மைல்கல்!
