judi virus attack android phone
உலக நாடுகளில் பெரும்பாலானவற்றில் கணினி சேவையை முடக்கி கிறங்கடித்த ‘வன்னாகிரை’ மால்வேர் வைரஸைத் தொடர்ந்து, அடுத்ததாக அனைவரின் அனைவரின் ஸ்மார்ட்போன்களுக்கும் ஆப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விண்டோஸ் இயங்குதளத்தை ‘வன்னாகிரை’ மால்வைரஸ் பதம்பார்த்த நிலையில், கூகுள் ‘ப்ளே ஸ்டோர்’ மூலம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்குஆப்பு வைக்க ‘ஜூடி’ வைரஸ் பரப்பிவிடப்பட்டுள்ளது
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை செயலிழக்க வைக்கும் நோக்கில் ‘ஜூடி’மால்வேர் வைரஸ் பரப்பிவிடப்பட்டுள்ளது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 85 லட்சம் முதல் 3.65 கோடி பேரின் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை தாக்கி அழித்துவிட்டது.
இது குறித்து பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான ‘செக் பாயின்ட்’கூறுகையில், “ ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் கூகுள் ‘ப்ளேஸ்டோரில்’ வரும்ஆப்ஸ்களில் போலியான வரும் விளம்பரங்களை கிளிக் செய்யும் போது, இந்த வைரஸ் ஸ்மார்ட்போனில் புகுந்து செயலிழக்க வைத்து விடும்.
கொரியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ‘ஜூடி’ வைரஸ் மூலம் 41 போலியானவைரஸ்களை தயாரித்து கூகுள் ப்ளே ஸ்டோரில்பரப்பி விட்டுள்ளது. எந்தெந்த நாடுகளில் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தௌிவாகத் தெரியவில்லை.
ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோரில் பல ஆண்டுகளாக இந்த வைரஸ் இருப்பதற்காகஅடையாளத்தை கண்டுபிடித்துள்ளோம். ஆனால், இவை மீண்டும் சமீபத்தில்‘அப்டேட்’ செய்யப்பட்டுள்ளது. எதற்காக இந்த வைரஸ் பரப்பிவிடப்பட்டுள்ளது என்பது இன்னும் தௌிவாகத் தெரியவில்லை.
இது குறித்து கூகுள்நிறுவனத்துக்கு நாங்கள் எச்சரிக்கை செய்தவுடன், உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது ‘ப்ளே ஸ்டோரில்’ இருக்கும் ஜூடி வைரஸை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்த வைரஸை ஏற்கனவே 45 லட்சம் பேர் பதவிறக்கம் செய்துள்ளதாக கணக்கீடு காட்டுகிறது.
தென் கொரியாவைச் சேர்ந்த ‘கினிவினி’ எனும் நிறுவனம் ஜூடி வைரஸை பரப்பிவிட்டு இருக்கலாம் எனக் கருதுகிறோம். இதன் முக்கியநோக்கம்வன்னாகிரை மால்வைரஸைப் போன்று, பணம் பறிக்கும் நோக்கமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
