நேபாளத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் கொலை..?? அதிர்ச்சியில் ஊடவியலாளர்கள்.

நேபாள நாட்டில் சீனா ஆக்கிரமிப்பு குறித்து பத்திரிகையில் செய்தி வெளியிட்ட மூத்த பத்திரிக்கையாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம், நேபாளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Journalist killed in Chinese occupation of Nepal Journalists in shock.

நேபாள நாட்டில் சீனா ஆக்கிரமிப்பு குறித்து பத்திரிகையில் செய்தி வெளியிட்ட மூத்த பத்திரிக்கையாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம், நேபாளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாள கிராமத்தில் சீன செய்துவரும் ஆக்கிரமிப்பை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர் பல்ராம் பணியா சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேபாளத்தில் மண்டு மாவட்டத்தில் பாகமதி ஆற்றின் கரையில் உள்ள நீர் மின் திட்டத்திற்கு அருகே அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கடந்த 11-ம் தேதி அவரது குடும்பத்தார் அவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில் பணியா முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதாவது இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்து கால்வாய் பள்ளத்தாக்கை உரிமை கொண்டாடி வந்த அதே நேரத்தில் மற்றொரு அண்டை நாடான நேபாளத்துடன் உறவு பாராட்டி கொண்டே அந்நாட்டை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

Journalist killed in Chinese occupation of Nepal Journalists in shock.

அந்நாட்டில் கிட்டத்தட்ட 33 ஹெக்டேர் நிலத்தை சீன ஆக்கிரமித்துள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.  இந்தியாவை சீனா எதிர்த்து வரும் நிலையில் சீனாவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியுள்ள நேபாளம், சீனாவை தனது நாட்டுக்குள் தாராளமாக அனுமதித்து வருகிறது. ஏற்கனவே  தனக்கு விசுவாசமாக உள்ள பாகிஸ்தானின் பல பகுதிகளை சீனா எழுதி வாங்கிவிட்ட நிலையில், நேபாளத்திலும் தனது ஆக்கிரமிப்பை செய்யத் தொடங்கியுள்ளது. திபெத்திற்கு சாலை அமைக்கும் சாக்கில் நேபாளத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை சீனா ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் நேபாளத்தின் வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் சுமார் 10 இடங்களில் நேபாளத்துக்கு சொந்தமான 33 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும், சீனா தனது நிலத்தை அதிகரிக்க ஆறுகளின் ஓட்டத்தை திசைதிருப்பி வருவதாகவும், அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

Journalist killed in Chinese occupation of Nepal Journalists in shock.

குறிப்பாக திபெத்தில் சாலை மற்றும் கட்டுமான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீனா, பாக்தரே, கோலா நிதி மற்றும் கர்னாலி நதியை திசை திருப்பியதால் ஹம்லா மாவட்டத்தில் மொத்தம் 10 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தீபத்தில் கட்டுமான பணிக்காக சிம்ஜென், புர்ஜுக், மற்றும் ஜம்புகோலா  ஆகிய இடங்களில் ஆறுகள் திசை  திருப்பப்பட்டதால் 6 ஹெக்டர் அளவுக்கு நேபாளத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் திபெத்தின் காட்டுக்குள் செல்லும் எனவும், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சீன அந்த பிராந்தியங்களில் தனது ஆயுதமேந்திய படைகளை நிறுத்தவும், அங்கு கண்காணிப்பு முகாம்களை அமைக்கக்கூடும் எனவும், நேபாள நாட்டின் விவசாயத்துறை அதிர்ச்சிகர அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கை, வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் பத்திரிக்கையாளர் பல்ராம் பணியா, 

Journalist killed in Chinese occupation of Nepal Journalists in shock.

இந்த ஆக்கிரமிப்பு செய்தியை பணியா வெளியிட்ட நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார். அவரின் செய்தி இந்திய பத்திரிக்கைகளிலும் பிரசுரமானது. நேபாளத்தின் மூத்த பத்திரிகையாளரான பலராம் பணியா, நேபாளத்தில் மிகப் பிரபலமான செய்தித்தாள்களில் ஒன்றான கான்டிபூர் டெய்லியில் பணிபுரிந்து வந்தார். அவர்  நேபாள கிராமங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தார். அவர் அரசியல் மற்றும் பாராளுமன்ற செய்தியாளராகவும் இருந்து வந்தார்.  இந்நிலையில் அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராகவும் கோர்கா மாவட்டத்தில் ரூயி கிராமத்தில் சீன ஆக்கிரமித்த பகுதிகள் குறித்தும், அதன் ஆக்கிரமிப்புகள் குறித்தும் தொடர்ந்து எழுதி வந்தார். அதாவது ரூயி கிராமத்தில் சீனா 60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், நேபாள அரசு அதை ஒருபோதும் எதிர்க்கவோ அல்லது தடுக்கவோ இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த மெத்தன போக்கே சீன ஆக்கிரமிப்புக்கு காரணம் என்றும் அவர் சுட்டிகாட்டினார். கோர்கா மாவட்டத்திலுள்ள ரூய் கிராம மக்களிடமிருந்து வருவாய்த்துறை வரி வசூல் செய்கிறது, ஆனாலும் நேபாள அரசாங்கம் இங்குள்ள மக்களை கண்டுகொள்வதில்லை, இப்பகுதி முழுவதும் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது என அவர் செய்தி வெளியிட்டிருந்தார். 

Journalist killed in Chinese occupation of Nepal Journalists in shock.

இதற்காக அவருக்கு பலமுறை மிரட்டல் வந்த நிலையில், ஆகஸ்ட் 11-ஆம் தேதி அவர் திடீரென மாயமானார், அவரது குடும்பத்தார் உள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேபாளத்தில் மண்டு மாவட்டத்தில் பாகமதி ஆற்றின் கரையில் உள்ள நீர் மின் திட்டத்திற்கு அருகே அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன அன்று அவர் பால்கு ஆற்றின் கரையில் நடந்து சென்றதாகவும். அப்போது அவரது தொலைபேசி கடைசியாக அங்கு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது முகம் கை கால் உள்ளிட்ட இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேபாளத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் நேபாள பத்திரிகையாளர் மத்தியில் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios