Asianet News TamilAsianet News Tamil

ரூ. 12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய நபர்.... எதற்காக தெரியுமா...?

சிலைகள் மட்டும் இன்றி உண்மையாகவே காட்சியளிக்கும் வித்தியாசமான உடைகளை செய்வதிலும் செப்பெட் தனிச் சிறப்பு பெற்று இருக்கிறது.

Japanese Man Spends rs 12 Lakh To Become A Dog
Author
India, First Published May 26, 2022, 9:43 AM IST

ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் நாய் போன்றே மாற இந்திய மதிப்பில் ரூ. 12 லட்சம் வரை செலவு செய்து இருக்கிறார். மனிதனாக பிறந்து நாய் போன்று மாறி இருக்கும் நபரின் புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ட்விட்டரில் டோகோ ஈவி என அறியப்படும் நபர் தான் நாய் போன்று மாறி இருக்கிறார். இது போன்று மாற வேண்டும் என்பது தன் வாழ்நாள் விருப்பம் என அவர் தெரிவித்து இருக்கிறார். செப்பெட் எனும் நிறுவனத்தில் முயற்சியால் தான் இந்த நபர் நாய் போன்று மாறி இருக்கிறார். கூலி (collie) எனும் வகையை சேர்ந்த நாய் போன்று இவர் மாறி இருக்கிறார். 

கைத் தேர்ந்த நிறுவனம்:

செப்பெட் நிறுவனம் திரைப்படம், விளம்பரங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு சிலைகளை மிக நேர்த்தியாக செய்து கொடுப்பதில் புகழ் பெற்ற ஒன்று ஆகும். சிலைகள் மட்டும் இன்றி உண்மையாகவே காட்சியளிக்கும் வித்தியாசமான உடைகளை செய்வதிலும் செப்பெட் தனிச் சிறப்பு பெற்று இருக்கிறது. இந்த நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஒட்டுமொத்த உடையின் கட்டணம் இந்திய மதிப்பில் ரூ. 12 லட்சம் வரை செலவாகி இருக்கிறது.

மேலும் இந்த உடையை முழுமையாக செய்து முடிக்க 40 நாட்கள் ஆகி இருக்கிறது. மனிதனாக பிறந்து நாய் போன்று மாறி இருக்கும் டோக்கோ தான், எதற்காக இப்படி செய்தார் என்பதை தனியார் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து வருகிறார். 

காரணம்:

அந்த வகையில், “என் விருப்பம் மற்றும் உடைக்கு ஏற்ற வகையில் மிக கச்சிதமாக பொருந்துவது கூலி மட்டும் தான். எனக்கு நான்கு கால் விலங்குகளை மிகவும் பிடிக்கும். அதிலும் அவை கியூட்-ஆக இருந்தால் எனக்கு இஷ்டம் அதிகம். இவற்றில், பெரிய விலங்கு அதே சமயம் எனக்கு நெருக்காமான ஒன்றாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். மேலும் அது பார்க்க அசலாகவே இருக்க வேண்டும் என்பதால், நாயாக மாற முடிவு செய்தேன். நீண்ட தலைமுடி கொண்ட நாய்கள் மனித உருவத்துடன் ஒற்றுப் போகும். இதன் காரணமாகவே நான் கூலியாக மாறினேன்,” என அவர் தெரிவித்தார்.

தனியாக யூடியூப் சேனல் வைத்து இருக்கும் டோக்கோ, தனது வியூவர்களிடம் அவர்கள் பார்க்க விரும்பும் வீடியோவை தெரிவிக்குமாறு கேட்கிறார். நாய் தோற்றம் தவிர இவரின் அசல் தோற்றம் எப்படி இருக்கும் என்பது மர்மமாகவே உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios