japan princess losing her royal family on behalf of love
ஜப்பான் இளவரசி மேக்கோ, பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாக படித்த காதலரை மணப்பதற்காக தனது இளவரசி பட்டத்தையே இழக்கத் துணிந்துவிட்டார்.
ஜப்பான் மன்னர் அகிட்டோ. இவரின் மகன் வழிப்பேத்தி இளவரசிமேக்கோ(வயது25). இளவரசர் அகிஷினோ- கிகோ தம்பதியரின் மகள் ஆவார். டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், டோக்கியோவில் உள்ள ஷிபுயா என்ற உணவு விடுதியில்தான் 5 ஆண்டுகளுக்கு முன்னர் கீ கொமுரு என்ற இளஞரை இளவரசி மேக்கா ச் சந்தித்தார் . அப்போது இருந்து இவரும் காதலில் விழுந்தனர். தற்போது, டோக்கியோ சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் இருவரும் ஒன்றாகப் படித்து வருகின்றனர். தற்போது கீ கொமுரு, டோக்கியோ சட்ட அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.

ஜப்பான் அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு அரச குடும்பத்தினரைச் சேர்ந்தவரேயே மணக்க வேண்டும். அவ்வாறு மணக்காமல் சாமானியர் ஒருவரை மணந்தால், அரச குடும்பத்தின் அந்தஸ்தையும், பட்டத்தையும் இழந்து, அரச குடும்பத்தில் இருந்தும், அரண்மனையில் இருந்துவௌியேற வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இளவரசி மேக்கோ, தன் காதலர் கீ கொமுரூவை திருமணம் செய்ய உறுதியாக இருப்பதால், தனது இளவரசி பட்டத்தையும் இழக்க துணிந்து விட்டர். தனது பெற்றோரும் மன்னருமான அகிஷினோ -கிகோவிடம் தனது காதலர் கொமுருவைஅறிமுகம் செய்து வைத்து, திருமணத்துக்கு அவர்களது சம்மதத்தை பெற்று விட்டார்.

இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு நடக்கலாம் எனத் தெரிகிறது. திருமணத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன் கடந்த 2005ம் ஆண்டு, மன்னரின் தங்கையும், இளவரசியுமான சகாயோ சமானியரும்,தனது காதலரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது,தனது இளவவசி பட்டத்தை துறந்துசமானியராக டோக்கியோ நகரில் வாழ்ந்து வருகிறார்.
