ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் தரையிறங்கியபோது, விமானம் ஒன்று தீப்பிடித்ததாக ஜப்பான் அரசு செய்தி நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவில் விமானத்தின் ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகள் வெளியே வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்நாட்டின் ஷின் சிட்டோஸ் விமான நிலையத்தில் இருந்து வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் JL516 ரக விமானம், கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியதே விமானத்தில் தீப்பிடித்ததற்குக் காரணம் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll to load tweet…

Scroll to load tweet…

ஜப்பான் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விபத்துக்குள்ளான விமானம் ஹொக்கைடோவில் உள்ள ஷின்-சிட்டோஸ் விமான நிலையத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு.. 155 முறை ஏற்பட்ட நிலஅதிர்வால் பரபரப்பு!

இந்த நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகள் 367 பேரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஜப்பான் அரசு செய்தி நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. விபத்தின் காரணமாக விமான நிலைய ஓடுபாதையிலும் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

ஜப்பானின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக அறியப்படும் டோக்கியோவின் ஹனேடா விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கிய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.