ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் கடந்து உலகெங்கும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என ஆதரவு பெருகி வருகிறது.
ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட்டு 3 ஆண்டுகளாக நடத்தபடாமல் உள்ளது.
இன்னும் இரண்டு நாட்களே இடையில் உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற எண்ணம் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாக ஓடுகிறது.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி தமிழக அரசு உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குக்கான தீர்ப்பை பொங்கலுக்குள் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
மத்திய அரசும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த முனைப்பும் காட்டவில்லை.
ஜல்லிகட்டுக்கு தடை இருந்தாலும் ஜல்லிகட்டை நடத்துவோம் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மறுபுறம் வாட்ஸ்-அப் பேஸ்புக் ட்விட்டர் என சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் கோடிகணக்கானவர்கள் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்தை பதிவு செய்கின்றன்ர்.
சமூக வலைதளங்களில் அழைப்பின் பேரில் தன்னெழுச்சியாக லட்சகணக்கான இளைஞர்கள் தமிழகம் மட்டுமல்ல.உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், கனடா, குவைத், துபாய் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரான மெல்போர்னில் கூடிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST