இத்தாலியில் வானில் பரந்த மர்மப் பொருள் : வேற்று கிரகத்தினரின் பறக்கும் தட்டா?

இத்தாலியின் தென் கிழக்கு பகுதியில் வானில் பறந்த மர்ம பொருள் வேற்று கிரகத்தினரின் பறக்கும் தட்டாக இருக்கலாம் என்ற கோணத்தில் நிபுணர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். 

இத்தாலியின் தென் கிழக்கு பகுதியில் சாலன்றோ என்ற நகரம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வானத்தில் மர்ம பொருள் ஒன்று பறந்தது.

முதலில் புள்ளி போல் தெரிந்த அந்த மர்ம பொருள் பல வண்ணத்தில் மின்னியபடி வானத்தில் சுற்றியது. ஆரம்பத்தில் நீள் வட்டம் தோற்றத்தில் இருந்த அந்த மர்ம பொருள் பின்னர் வட்ட வடிமாகத் தெரிந்தது.

அப்போது அது பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. சிறிது நேரம் கழித்து அந்த பொருள் இரண்டாக உடைந்து துருக்கியை நோக்கி செல்வது போல் இருந்தது. அடுத்து அந்த பொருளை காணவில்லை.

4 நிமிட நேரம் அது வானத்தில் தென்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ஏராளமானோர் பார்த்த நிலையில் படம்பிடித்து சமூக வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கலாம் எனவும் வீனஸ் கிரகத்தின் காட்சியாக இருக்கலாம் எனவும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

சில நேரங்களில் வீனஸ் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம். அது பூமி அருகே வந்ததால் இவ்வாறு தோன்றியிருக்கலாம் எனவுக் கூறப்படுகிறது.